மீட்டர் உள்ள மூச்சிழுப்பு மருந்துக் குப்பி என்பது என்ன?
அநேகமான ஆஸ்துமா மருந்துகள், மீட்டருள்ள மூச்சிழுப்புக் குப்பியின் (MDI) உதவியுடன் வழங்கப்படுகின்றன. MDI ஆனது உலோகத்தால் செய்த ஒரு குடுவையாகும், இது ஒரு பிளாஸ்டிக் பிடிக்குள் வைக்கப்படுகின்றது. இந்த உலோகக் குடுவைக்குள் ஆஸ்துமா மருந்து இருக்கின்றது. இந்தக் குடுவை அமுக்கப்படும்போது, இது மருந்தை நுண்துளிகளாக சீறிவரச்செய்யும். சரியான வேளையளவு மருந்தை சுவாசப்பைக்குள் செலுத்த, MDI ஆனது ஒரு ஸ்பேசர் புட்டியுடன் உபயோகிக்கப்படவேண்டும்.
சிறு பிள்ளைகள் MDI ஐ தாங்களாகவே சரியாக உபயோகிக்க முடியாது. உங்கள் பிள்ளைக்கு நீங்கள் உதவவேண்டும்.
9 வயதுக்குக் குறைவான இளம் பிள்ளைகள், பொதுவாக MDI ஐ சரியான முறையில் உபயோகிப்பதில்லை. உங்கள் பிள்ளைக்கு நீங்கள் உதவவேண்டும்.
ஸ்பேசர் புட்டி என்பது என்ன?
மீட்டருள்ள மூச்சிழுப்புக் குப்பியிலிருந்து வரும் மருந்தின் வேகத்தை, ஒரு ஸ்பேசர் புட்டி குறைக்கின்றது. இதன் மூலமாக மருந்தானது ஸ்பேசர் புட்டியில் தங்கி நிற்பதால், பிள்ளை மூச்சின் மூலம் மருந்தை சுவாசப்பைக்குள் உள்வாங்குகின்றது. ஸ்பேசர் புட்டியில்லாமல், மருந்தானது நேரடியாக பிள்ளையின் வாயிலும் தொண்டையிலும் சீறி வெளியேறுவதால், குறைவான அளவு மருந்தே சுவாசப்பையைச் சென்றடைகின்றது. ஸ்பேசர் புட்டியானது ஏரோசல்-ஹோள்டிங் சேம்பர் எனவும் அழைக்கப்படுகின்றது.
ஏரோசேம்பர்® மற்றும் ஒப்டிசேம்பர்® ஆவன ஸ்பேசர் புட்டிக்கான உதாரணங்களாகும்.
இயலுமான போதெல்லாம் பிள்ளையின் மூச்சிழுப்பு மருந்தை ஸ்பேசர் புட்டியின் உதவியுடன் கொடுக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும். மருந்தை வழங்க மிகச்சிறந்த வழி இதுவாகும்.
உங்கள் பிள்ளை கோர்டிக்கோ ஸ்டேரொயிட் மூச்சிழுப்பு மருந்தை உபயோக்கிக்கும்போதெல்லாம் ஒரு ஸ்பேசர் புட்டி பயன்படுத்தப்பட வேண்டும். கோர்டிக்கோ ஸ்டேரொயிட் மருந்தானது நேரடியாக வாய்க்குள் ஸ்பிரே செய்யப்படும் போது அதாவது சீறி வெளியேற்றப்படும்போது, மருந்து வாயிலும் தொண்டையிலும் படிந்து விடுகின்றது. இது வாயில் உறுத்தலையும் சிலவேளைகளில் தொற்றுநோயையும் (வாய்வெண்புண்) உண்டாக்கும்.
ஒவ்வொரு பிள்ளையும் தனக்கே உரிய ஸ்பேசர் புட்டியை வைத்திருக்கவேண்டும். வேறு பிள்ளைகளுடன் ஸ்பேசர் புட்டியை பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
ஸ்பேசர் புட்டியை வாய்த் துண்டு (மவுத் பீஸ்) அல்லது ஒரு முகமூடியுடன் (மாஸ்க்) உபயோகப்படுத்தலாம்
உங்கள் பிள்ளையைப் பொறுத்து, ஆஸ்துமா மருந்தை ஒரு மவுத் பீஸ் உடைய அல்லது மாஸ்க் உடைய ஸ்பேசர் புட்டியுடன் வழங்கலாம். உங்கள் பிள்ளை, மவுத் பீஸ் ஒன்றை உபயோகிக்கும்போது அதனை உதடுகளால் இறுகப் பற்றவேண்டும் என்கின்ற அறிவுரையை பின்பற்றாமல் போகலாம் என்பதால், ஸ்பேசர் புட்டியை ஒரு மாஸ்க் உடன் உபயோகிக்க வேண்டிவரலாம்.
உங்கள் பிள்ளையைப் பொறுத்து, ஆஸ்துமா மருந்தை ஒரு மவுத் பீஸ் உடைய அல்லது மாஸ்க் உடைய ஸ்பேசர் புட்டியுடன் வழங்கலாம். இளம் பிள்ளைகள் ( 5 குக் குறைவான வயது), மவுத் பீஸ் ஒன்றை உபயோகிக்கும்போது அதனை உதடுகளால் இறுகப் பற்றவேண்டும் என்கின்ற அறிவுரையை பின்பற்றாமல் போகலாம் என்பதால், ஸ்பேசர் புட்டியை ஒரு மாஸ்க் உடன் உபயோகிக்க வேண்டிவரலாம்.
ஸ்பேசர் புட்டியை மவுத் பீஸ் ஒன்றுடன் உபயோகிக்கும் அளவுக்கு வளர்ந்தபின், பிள்ளை மவுத் பீஸை உபயோகிக்கத் தொடங்கவேண்டும். மவுத் பீஸ் உள்ள ஒரு ஸ்பேசர் புட்டி, மருந்தை மிகச்சிறந்த வழியில் உள்ளே செலுத்துகின்றது. உங்கள் பிள்ளை ஸ்பேசர் புட்டியை ஒரு மாஸ்க் உடன் உபயோக்கிக்கும்போது, மருந்து மூக்கில் படிந்துவிடலாம். ஸ்பேசர்புட்டியை மவுத் பீஸ் உடன் உபயோகித்தால். இது நடைபெறுவதை தவிர்த்து விடலாம்.
முகமூடியுடன்கூடிய (மாஸ்க்) ஸ்பேசர் புட்டியை எப்படி உபயோகிப்பது
உங்கள் பிள்ளைக்கு ஆஸ்துமா மருந்தை, மாஸ்க் உடன் கூடிய ஸ்பேசர் புட்டியின் மூலம் கொடுப்பதற்கு கீழ்க்காணும் 4 படிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
படி 1: MDI மற்றும் ஸ்பேசர் புட்டியை சேகரியுங்கள்
- ஸ்பேசர் புட்டியையும் மீட்டர் உள்ள மூச்சிழுப்புக் குப்பியையும் எடுத்துக்கொள்ளுங்கள்
- ஏற்கெனவே பொருத்தப்படாதிருந்தால், குப்பியை பிளாஸ்டிக் பிடிக்குள் புகுத்துங்கள்
- MDI யிலிருந்து பிளாஸ்டிக் மூடியை அகற்றிவிடுங்கள்
படி 2 : தயாராகுங்கள்
- MDI ஐ ஸ்பேசர் புட்டியின் ரப்பர் துளைக்குள் செங்குத்தாகப் புகுத்தவும். MDI யானது துளைக்குள் இறுக்கமாகப் பொருந்தவேண்டும்.
- உங்கள் பிள்ளையை செளகரியமான நிலையில் நேராக இருத்தி அல்லது நிறுத்தி தயாராக்குங்கள்.
படி 3: மாஸ்கை உங்கள் பிள்ளையின் முகத்திற்கு நேராக பிடியுங்கள்
- MDI யையும் ஸ்பேசர் புட்டியையும் ஒன்றாகப் வைத்திருங்கள். 5 தடவைகள் குலுக்குங்கள்
- முகமூடியை உங்கள் பிள்ளையின் முகத்தில் இறுக்கமாகப் போடுங்கள் அல்லது பிடியுங்கள். வாயையும் மூக்கையும் மூடுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
படி 4: மருந்தைக் கொடுங்கள்
- ஒரு கையால் மாஸ்கை உங்கள் பிள்ளையின் முகத்தில் பிடியுங்கள். மறு கையால் ஸ்பேசர் புட்டியை பிடித்துக்கொண்டு, உங்கள் பெருவிரலால் MDI ஐ அழுத்தமாக அமத்துங்கள். இது பஃப் (ஒரு சீறல் வெளியேற்றம்) ஒன்றை ஸ்பேசர் புட்டிக்குள் வெளியிடும்.
- 10 லிருந்து 15 விநாடிகளுக்கு மாஸ்கை பிள்ளையின் மூக்கிற்கும் வாய்க்கும் மேலாக பிடித்திருங்கள். இது பிள்ளை 6 தடவைகள் மூச்செடுக்க வகைசெய்யும். மூச்சுக்களை எண்ணுவதற்கு நீங்கள் ஸ்பேசர் புட்டிக்குள் இருக்கும் வால்வின் அசைவையும் அவதானிக்கலாம். உங்கள் பிள்ளை ஆழமாக சுவாசிக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைக்கு 1 க்கு மேற்பட்ட பஃப் மருந்து தேவைப்பட்டால், படிகள் 3 ஐயும் 4 ஐயும் மீண்டும் செய்யுங்கள்.
படி 5: உங்கள் பிள்ளை நீரால் வாயைக் கழுவுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்
- மாஸ்கை பிள்ளையின் முகத்திலிருந்து அகற்றுங்கள்.
- பிள்ளையின் முகத்தைத் துடையுங்கள். அதன் பின்னர் பிள்ளையை நீர் அருந்த அல்லது நீரால் வாயைக் கழுவ அனுமதியுங்கள். இது வாய்க்குள் மீதமிருக்கக்கூடிய மருந்தை அகற்றுவதோடு வாய்வெண்புண் வருவதையும் தடுக்கும்.
ஸ்பெசர் புட்டியை வாய்த்துண்டுடன் (மவுத் பீஸ்) உபயோகிப்பது எப்படி
பின்வருவன அனைத்தையும் செய்யக்கூடிய பிள்ளைகளுக்கு மவுத் பீஸ் உடன் கூடிய ஸ்பேசர் புட்டி பொருத்தமானது:
- ஸ்பேசர் புட்டியின் மவுத் பீஸை உதடுகளால் இறுகப்பற்றுவது
- வாயால் மட்டும் சுவாசிப்பது
- 10 விநாடிகளுக்கு மூச்சை இழுத்து உள்வைத்துக்கொள்வது
வழக்கமாக இவர்கள் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
ஸ்பேசர் புட்டியை மாஸ்க் உடன் பாவிக்கும்போது பிள்ளையின் மூக்கிற்குள் மருந்து படிந்துவிடலாம். அறிவுரைகளை பின்பற்றுமளவுக்கு பிள்ளை வளர்ந்தபின், அவள் மவுத் பீஸ் கொண்ட ஸ்பேசர் புட்டியை உபயோகிக்கவேண்டும்.
மவுத் பீஸ் கொண்ட ஸ்பேசர் புட்டியின் மூலம் ஆஸ்துமா மருந்தை வழங்க பின்வரும் 4 படிகளை பின்பற்றுங்கள்.
படி 1: MDI யையும் ஸ்பேசர் புட்டியையும் சேகரியுங்கள்
- ஸ்பேசர் புட்டி மற்றும் மீட்டர் உள்ள மூச்சிழுப்புக் குப்பியை எடுத்துக்கொள்ளுங்கள்.
- ஏற்கெனவே இணைக்கப்படாதிருந்தால், பிளாஸ்டிக் பிடிக்குள் குப்பியை புகுத்துங்கள்.
- MDI யிலிருந்தும் ஸ்பேசர் புட்டியிலிருந்தும் மூடிகளை அகற்றிவிடுங்கள்.
படி 2 : தயாராகுங்கள்
- MDI ஐ ஸ்பேசர் புட்டியின் ரப்பர் துளாய்க்குள் செங்குத்தாகப் புகுத்தவும். MDI யானது துளைக்குள் இறுக்கமாகப் பொருந்தவேண்டும்.
- உங்கள் பிள்ளையை செளகரியமான நிலையில் நேராக இருத்தி அல்லது நிறுத்தி தயாராக்குங்கள்.
படி 3: மருந்தைக் கொடுங்கள்
- MDI யையும் ஸ்பேசர் புட்டியையும் ஒன்றாக வைத்திருங்கள். 5 தடவைகள் குலுக்குங்கள்
- பிள்ளையை மூச்சை வெளிவிடுமாறு கேளுங்கள்.
- பிள்ளையை தனது பற்களுக்கிடையில் ஸ்பேசர் புட்டியின் மவுத் பீஸை வைக்குமாரு கேளுங்கள்.
- காற்று உட்புகாதவாறு மவுத் பீஸை உதடுகளால் இருகப் பற்றுமாறு பிள்ளையிடம் கேளுங்கள்.
- MDI ஐ அழுத்தமாக கீழே அமத்துங்கள். இது ஸ்பேசர் புட்டிக்குள் பஃப் ஒன்றை வெளிவிடும்.
- முடிந்தவரை ஆழமாக, நீண்ட, வேகம் குறைந்த பாணியில் ஒரு தடவை மூச்சை இழுக்குமாறு பிள்ளையிடம் கேளுங்கள்.
- ஸ்பேசர் புட்டி விசிலடிப்பது போன்ற சத்தத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். விசில் சத்தம் கேட்டால், பிள்ளை மிகவிரைவாக மூச்சை உள்ளிழுக்கின்றது என அர்த்தமாகும். மருந்தை ஒழுங்காக உள்ளிழுப்பதை இது தடைசெய்யும். பிள்ளையை வேகத்தைக்குறைத்து மூச்சை இழுக்கும்படி கேளுங்கள்.
படி 4: பிள்ளையிடம் மூச்சையிழுத்து உள்வைத்துக்கொள்ளும்படி கேளுங்கள்
- வாயிலிருந்து ஸ்பேசர் புட்டியை வெளியே எடுக்கும்படி பிள்ளையிடம் கேளுங்கள்.
- மெதுவாக நீங்கள் 10 எண்ணி முடிக்கும்வரை மூச்சை உள் வைத்திருக்கும்படி பிள்ளையிடம் கேளுங்கள்.
- மிக மெதுவாக நீங்கள் 10 எண்ணி முடிக்கும்வரை மூச்சை உள் வைத்திருக்கும்படி பிள்ளையிடம் கேளுங்கள்.
- உங்கள் பிள்ளையிடம் மெதுவாக மூக்கின்மூலம் மூச்சை வெளியே விடும்படி கேளுங்கள்.
இந்த மாஸ்க் உடன் கூடிய மஞ்சள் ஸ்பேசர் புட்டியின் அளவு உங்கள் பிள்ளைக்கு பொருந்தாதிருந்தால் மற்றும் அவளால் 10 விநாடிகளுக்கு மூச்சை உள்ளிழுத்து வைத்திருக்க முடியாவிட்டால், நீங்கள் அவளிடம் 5 தடவைகள் மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடச்சொல்லலாம். மருந்தை உள்ளிழுப்பதற்கு மிகச் சிறந்த வழி இதுவல்ல. ஆனால் பிள்ளை மவுத் பீஸை உபயோகிப்பதற்கு பழகிக்கொள்ள இது உதவும். பிள்ளை 10 விநாடிகளுக்கு மூச்சை உள்ளிழுத்து வைத்திருப்பதை பழகிக்கொள்ள அவளுக்குத் தொடர்ந்து உதவுங்கள்.
இந்த மாஸ்க் உடன் கூடிய மஞ்சள் ஸ்பேசர்புட்டியின் அளவு உங்கள் பிள்ளைக்கு பொருந்தாதிருந்தால் மற்றும் அவளால் 10 விநாடிகளுக்கு மூச்சை உள்ளிழுத்து வைத்திருக்க முடியாவிட்டால், நீங்கள் அவளிடம் 4 லிருந்து 5 தடவைகள் மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடச்சொல்லலாம். மருந்தை உள்ளிழுப்பதற்கு மிகச் சிறந்த வழி இதுவல்ல. ஆனால் பிள்ளை மவுத் பீஸை உபயோகிப்பதற்கு பழகிக்கொள்ள இது உதவும். பிள்ளை 10 விநாடிகளுக்கு மூச்சை உள்ளிழுத்து வைத்திருப்பதை பழகிக்கொள்ள அவளுக்குத் தொடர்ந்து உதவுங்கள்.
உங்கள் பிள்ளைக்கு 1 க்கு மேற்பட்ட பஃப் மருந்து தேவைப்பட்டால், படிகள் 3 ஐயும் 4 ஐயும் மீண்டும் செய்யுங்கள். பின்பு பிள்ளை வாயைக் கழுவிக்கொள்வதை நிச்சயப்படுத்துங்கள்.