மூச்சுத்திணறுவதற்கான காரணம் என்ன?
ஏதாவது ஒரு பொருள் தொண்டையில் சிக்கி நுரையீரல் காற்றுக்குழாயை அடைக்கும்போது மூச்சுத்திணறுதல் ஏற்படுகிறது. இந்த அடைப்பு, பகுதி அடைப்பாக இருக்கலாம் அல்லது முழுமையான அடைப்பாக இருக்கலாம். நுரையீரல் காற்றுக்குழாய் என்பது நுரையீரலுக்குள் காற்று செல்லும் வழி. நீராகாரங்களினால் ஏற்படும் அடைப்பு போன்ற பெரும்பாலான மூச்சுத்திணறுதல் சம்பவங்கள், உதவி தேவைப்படாமலேயே சரியாகிவிடும். நுரையீரல் காற்றுக்குழாய் அடைபடும்போது, இது பிறபொருளினால் ஏற்படும் நுரையீரல் காற்றுக்குழாய் தடங்கல் என அழைக்கப்படும்.
உங்களுடைய பிள்ளைக்கு மூச்சுத்திணறுகிறதா என்பதை எப்படிச் சொல்வது
Aஒரு வீரியம் குறைந்த மூச்சுத்திணறுதல் சம்பவம் உங்களுடைய பிள்ளைக்கு இருமல், வாய்ப்பூட்டு, அல்லது வாந்தியை ஏற்படுத்தலாம். உங்களுடைய பிள்ளையின் முகமும் கடுஞ்சிவப்பு நிறமாக மாறலாம். உங்களுடைய பிள்ளைக்கு அதிக வினைமையான மூச்சுத்திணறுதல் சம்பவம் ஏற்பட்டால் அவளால் சுவாசிக்க, அழ அல்லது பேசமுடியாமற் போகலாம். அவளுடைய தோல், உதடுகள், நகங்கள் என்பன நீலம் கலந்த ஊதா நிறமாக மாறலாம்.
உங்களுடைய பிள்ளைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும்
உங்களுடைய பிள்ளை பின்வருவனவற்றிற்குப் பிரதிபலிப்பைக் காண்பிக்கிறாளா என்பதைச் சோதித்துப் பார்க்கவும்
உங்களுடைய பிள்ளையை மெதுவாகத் தட்டி, “நீ நன்றாக இருக்ககிறாயா?” என உரத்த குரலில் கேட்கவும். அவள் பதில் சொல்லவில்லை எனின், 9-1-1 ஐ அழைக்கவும். நீங்கள் தனிமையாக இல்லாவிட்டால், உங்களுக்காக அழைக்கும்படி வேறு எவரையாவது கேட்கவும்.
உங்களுடைய பிள்ளை பதிலளித்தால், தொண்டையில் அடைத்திருக்கும் பொருளை இருமி வெளியேற்றும்படி உற்சாகப்படுத்தவும். அந்தப் பொருளை வெளியே எடுப்பதற்காக உங்களுடைய பிள்ளையின் முதுகில் அடிக்கவேண்டாம். பிள்ளைக்கு குடிப்பதற்கு எதுவும் கொடுக்கவேண்டாம். இது நுரயீரலுக்கு காற்று செல்வதை தடுக்கலாம்.
உங்களுடைய பிள்ளை சுவாசிக்கிறாளா என்பதைச் சோதித்துப் பார்க்கவும்.
உங்களுடைய பிள்ளை சுவாசிக்காவிட்டால், 9-1-1ஐ அழைக்க்கவும். நீங்கள் தனிமையாக இல்லாவிட்டால், உங்களுக்காக அழைக்கும்படி வேறு எவரையாவது கேட்கவும்.
உங்களுடைய பிள்ளை சுவாசித்தால், அவளுடைய நுரையீரல் காற்றுக்குழாய் முழுமையாக அடைக்கப்படவில்லை. அவளுடைய நுரையீரல் காற்றுக்குழாய் திறந்திருப்பதற்காகவும், அது முழுமையாக அடைக்கப்படாமல் இருப்பதற்காகவும் உங்களுடைய பிள்ளையை அவளின் ஒரு பக்கமாகத் திருப்பி வைக்கவும். அவளுடைய சுவாசித்தல் முன்னேற்றமடையும் வரை அவளின் பக்கத்திலேயே இருக்கவும்.
உங்களுடைய பிள்ளைக்கு மேலும் வினைமையான மூச்சுத்திணறுதல் சம்பவம் ஏற்பட்டால், 9-1-1 ஐ அழைக்கவும். நீங்கள் தனிமையாக இல்லாவிட்டால், உங்களுக்காக அழைக்கும்படி வேறு எவரையாவது கேட்கவும். தடங்கலை சரிசெய்வதற்காக நீங்கள் உடனே செயற்படவேண்டும்.
ஹெம்லிக் முறை
ஹெம்லிக் முறை, நுரையீரல் காற்றுக்குழாயில் சிக்கியிருக்கும் பொருளை பலமாக வெளியேற்றுவதற்கு உதவியாக மார்பிலுள்ள அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.
உங்களுடைய பிள்ளை 1 வயதுக்கு மேற்பட்டவனாக இருந்தால்
உங்களுடைய பிள்ளைக்குப் பின்னால் நிற்கவும் அல்லது முழங்காற்படியிடவும். உங்களுடைய பிள்ளையின் கீழ் விலா எலும்புக்குச் சற்று தாழ்வாக அவளை இறுக்கமாகக் கட்டியணைக்கவும். 45 பாகைக் கோணத்தில் மேல் நோக்கி விரைவாக உந்தவும். இது அவளின் மார்பில் மீதமாக இருக்கும் காற்றைப் பலமாக வெளியே தள்ளி அடைபட்டிருக்கும் பொருளை வெளியே கொண்டுவர உதவு செய்யும். இதை உடனடியாக 10 முறைகளுக்கு மேல் செய்யவும்.
உங்களுடைய பிள்ளையை நிமிர்ந்து படுக்கவைத்தும் ஹெம்லிக் முறையைச் செய்யலாம். உங்களுடைய ஒரு மணிக்கட்டின் உட்பகுதியை அவளின் விலா எலும்புகளுக்குச் சற்றுத் தாழ்வாக வைக்கவும். உங்களுடைய மற்றக் கையை முதற்கைக்கு மேலே வைத்து அதிகளவு அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கவும்.
உங்களுடைய பிள்ளை 1 வயதுக்கு கீழ்ப்பட்டவனாக இருந்தால்
உங்களுடைய முழங்கால்களில் அல்லது உங்களுடைய முன்னங்கைகளின் மேலாக உங்களுடைய பிள்ளையின் முகம் கீழ்நோக்கியபடி வைக்கவும். உங்களுடைய மணிக்கட்டின் உட்பகுதியை உபயோகித்து தோள்ப்பட்டை எலும்புகளுக்கிடையில் ஐந்து இருக்கமான அடிகள் கொடுக்கவும்.
உங்களுடைய பிள்ளை இன்னமும் சுவாசிக்காவிட்டால், அவளை நிமிர்ந்து படுக்கவைத்து இரு விரல்களை முலைக்காம்புகளின் கோட்டுக்குச் சற்றுத் தாழ்வாக, கீழ் மார்பெலும்பின் மேல் வைக்கவும். உங்களுடைய விரல்களை உபயோகித்து விரைவான ஐந்து மார்பு அழுத்தங்களைக் கொடுக்கவும்.
என்னுடைய பிள்ளைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதை எப்படித் தடுக்கலாம்
பிள்ளைகள் வளரும்போது அவர்களைச் சுற்றியுள்ள சூழல் பற்றிய அறிய விரும்பும் ஆவலும் வளரும். பிள்ளைகள் பெரும்பாலும் பழக்கமற்ற ஒரு பொருளைக் காணும்போது முதலில் அவற்றைக் கைகளால் தொடுவார்கள். பின்பு ஒரு நொடிப்பொழுதில் அதை வாயில் வைப்பார்கள். இது சம்பவிப்பதைத் தடுப்பதற்குப் பின்வரும் படிகளை எடுக்கவும்:
- சிறிய பொருட்களையும் உணவுகளையும் பிள்ளைக்களுக்கு எட்டாதவாறு வைக்கவும்.
- உங்களுடைய பிள்ளை 4 வயதுக்குட்பட்டவனாக இருந்தால், சோளப்பொரி, சுவிங்கம், கடினமான இனிப்பு வகைகள் போன்றவற்றைக் கொடுக்கவேண்டாம். ஹொட்டோக், சொசேஜர்ஸ், முந்திரிப்பழம் போன்ற மென்மையான உணவுகளைச் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொடுக்கவும்.
- விழுங்குவதற்கு முன்னர் எல்லா உணவுகளையும் நன்கு மெல்லும்படி உங்களுடைய பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்கவும்.
- விருந்துகளுக்குப் பின்னர் உடனடியாக எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிடவும். உணவுகளை விட ரப்பர் பலூன் துண்டுகள் மூலமாக ஏற்படும் மூச்சுத்திணறல் தான், மூச்சுத்திணறல் சம்பந்தமான மரணங்களுக்கு முன்னணிக் காரணமாக அமைந்துள்ளது.
முக்கிய குறிப்புகள்
- நுரையீரல் காற்றுக்குழயில் அடைப்பு ஏற்படும்போது மூச்சுத்திணறல் சம்பவிக்கிறது.
- உங்களுடைய பிள்ளை சுவாசிக்காவிட்டால், 9-1-1 ஐ அழைக்கவும். நீங்கள் தனிமையாக இல்லாவிட்டால், உங்களுக்குக்காக வேறு எவரையாவது அழைக்கும்படி கேட்கவும்.
- உங்களுடைய பிள்ளை 1 வயதுக்கு மேற்பட்டவளாக இருந்தால், ஹெம்லிக் முறையை செய்வதற்காக அவளுக்குப் பின்னால் எழுந்து நிற்கவும் அல்லது முழங்காற்படியிடவும்.
- உங்களுடைய பிள்ளை 1 வயதுக்குட்பட்டவளாக இருந்தால், ஹேம்லிக் முறையை செய்வதற்காக, அவளுடைய முகத்தை உங்களுடைய முழங்கால்களில் அல்லது முன்னங்கைகளின் மேல் வைக்கவும்.
- சிறிய பொருட்களையும் உணவுகளையும் சிறு பிள்ளைகளுக்கு எட்டாதவாறு வைக்கவும்.