தொற்றுநோய்த் தடுப்பு சக்தி உங்கள் பிள்ளைக்கு அநேக கடுமையான, உயிரை அச்சுறுத்தும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. உங்கள் பிள்ளைக்கு உங்கள் மாகாணம், மாநிலம், அல்லது நாட்டில் பரிந்துரை செய்யப்பட்ட அட்டவணைப்படி "ஊசிகள் அல்லது மருந்துகள்" கொடுக்கப்பட வேண்டும். மேலுமான குறிக்கப்பட்ட தகவல்களுக்கு, உங்கள் பிள்ளையின் மருத்துவர், அல்லது உங்கள் சமுதாயத்திலுள்ள உள்ளூர் பொது உடல்நல சேவைத் தாதியைத் தொடர்பு கொள்ளவும்.
பிள்ளைப் பருவத்தில் பரிந்துரை செய்யப்பட்ட நோய்த்தடுப்பு மருந்துகளின் அட்டவணை பின்வருமாறு:
வயது | dTaP-IPV | Hib | MMR | Var | HepB | Pneu-C | Men-C | dTap | Flu |
---|---|---|---|---|---|---|---|---|---|
2மாதங்கள் | X | X | சிசு 3 டோஸ்கள்
அல்லது
பதின்ம வயதுக்கு முன்/பதின்ம வயதில் 2-3 டோஸ்கள் | X | X | ||||
4 மாதங்கள் | X | X | X | X | |||||
6 மாதங்கள் | X | X | X | X அல்லது | X 6-23 மாதங்கள் 1-2 டோஸ்கள் | ||||
12மாதங்கள் | X | X | X 12-23 மாதங்கள் | X இதுவரை கொடுக்கப்படாவிட்டால் | |||||
18 மாதங்கள் | X | X | X or X | ||||||
4-6 வருடங்கள் | X | ||||||||
14-16 வருடங்கள் | X இது வரை கொடுக்கப்படாவிட்டால் | X |
குழந்தைகள், பிள்ளைகள் மற்றும் இளைஞர்களுக்காகப் பரிந்த்துரை செய்யப்பட்ட நோய்த்தடுப்பு மருந்துகளின் அட்டவணை. கனடாவின் பொது உடல் நல சேவை ஏஜன்சி, 2002.
dTaP-IPV: டிப்தீரியா, ஏற்பு வலி, எசெலூலர் பெர்டூஸிஸ், மற்றும் செயலிழக்கச் செய்யப்பட்ட இளம்பிள்ளைவாத வைரஸ் தடுப்பு மருந்து
Hib: ஹீமோஃபிலஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி இணைப்புத் தடுப்பு மருந்து
MMR: சின்னமுத்து, கூகைக்கட்டு, மற்றும் உருபெல்லா நோய்த் தடுப்பு மருந்து
Var: வரிசெல்லா நோய்த் தடுப்பு மருந்து
HepB: ஹெப்படைற்டிஸ் B நோய்த் தடுப்பு மருந்து
Pneu-C: நியூமோகோக்கல் நோய் இணைத் தடுப்பு மருந்து
Men-C: மெனிங்கோக்கல் C நோய் இணைத் தடுப்பு மருந்து
dTaP: டிப்தீரியா, ஏற்பு வலி, மற்றும் எசெலூலர் பெர்டூஸிஸ் நோய்த் தடுப்பு மருந்து (பெரியவர்களின் ஃபோர்முலேஷன்)
காய்ச்சல்: இன்ஃபுளுவென்சா நோய்த் தடுப்பு மருந்து
ஒன்பதுக்கும் 13க்கும் இடைப்பட்ட வயதுள்ள பெண் பிள்ளைகள் HPB (ஹியூமன் பபில்லொவைரஸ்) நோய்த் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளும்படி ஆலோசனை கூறபடுகிறார்கள்
நோய்த் தடுப்பு சக்தியளித்தல் என்பதன் விளக்கம்
டிப்தீரியா, ஏற்பு வலி, மற்றும் எசெலூலர் பெர்டூஸிஸ் (dTaP) நோய்த் தடுப்பு மருந்து
டிப்தீரியா, ஏற்பு வலி, மற்றும் பெர்டூஸிஸ், அல்லது கக்குவான் இருமல் என்பன மரணத்தை விளைவிக்கக்கூடிய நோய்களானதால் இவற்றிற்கு எதிராக நோய்த்தடுப்பு சக்தி கொடுக்கப்படவேண்டியது முக்கியம். கக்குவான் இருமல், விசேஷமாகக் குழந்தைகளில், மிகவும் ஆபத்தான வியாதியாகும். கக்குவான் இருமல் நோய்த் தடுப்பு மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்க விளைவைவிட, நோயினால் ஏற்படக்கூடிய வேதனை மற்றும் மரண ஆபத்து மிகவும் மோசமானது. பெர்டூஸிஸ் நோய்க்கு எதிராகத் தடுப்பு சக்தியளிக்கப்படாத 3000 பிள்ளைகளில் ஒருவருக்கு கக்குவான் இருமல் நோய் வர வாய்ப்புள்ளது. இதற்கு மாறாக , தடுப்பாற்றல் பெற்ற இருபது இலட்சம் பிள்ளைகளுள் ஒருவருக்கு நரம்பு பழுதடைய வாய்ப்பு இருக்கிறது. குறைந்த எண்ணிக்கையான பிள்ளைகள் நோய்த்தடுப்பாற்றலைப் பெற்றுக்கொண்டால் பெர்டூஸிஸ் நோய் வர வாய்ப்புள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
டிப்தீரியா, ஏற்பு வலி, எசெலூலர் பெர்டூஸிஸ், மற்றும் செயலிழக்கச் செய்யப்பட்ட இளம்பிள்ளை வாத (dTaP-IPV) நோய்த் தடுப்பு மருந்து
மேற்குறிப்பிட்ட நோய்த்தடுப்பு மருந்து போலவே இதுவுமாகும். ஆனால் இது செயற்பாடற்ற இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்தையும் கொண்டிருக்கிறது. இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து, இந்த அரிதான, ஆனால் முடமாக்கும் நோயிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கிறது. தற்போது இந்த செயற்பாடற்ற இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து எல்லா இளம்பிள்ளை வாத நோய் டோசுக்கும் சிபாரிசு செய்யப்படுகிறது.
சின்னமுத்து, கூகைக்கட்டு, மற்றும் உருபெல்லா(MMR) நோய்த் தடுப்பு மருந்து
சமீபத்தில், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சின்னமுத்து நோய் திடீரெனப் பரவுவது பிள்ளைகளுக்கு இரண்டு முறை MMR நோய்த் தடுப்புமருந்தைக் கொடுக்கவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் 12 மாத வயதையுடையவர்களாக இருக்கும்போது முதல் "டோஸ்" கொடுக்கப்பட வேண்டும். இரண்டாவது "டோஸ்" அவர்கள் 18 மாதம் அல்லது நான்கு முதல் ஆறு வயதையடையும்போது கொடுக்கப்படவேண்டும். இந்த நோய்கள் பெரும்பாலும் கனடாவை விட்டுப்போய்விட்டன. ஆயினும், பிள்ளகளுக்கு முழுமையான நோய்த் தடுப்புமருந்து கொடுக்கப்படாவிட்டால் அவை திரும்பி வரக்கூடும்.
ஹீமொஃபிலஸ் இன்ஃபுளுவென்ஸா டைப் b இணைப்பு நோய்த் தடுப்பு மருந்து
ஹீமொஃபிலஸ் இன்ஃபுளுவென்ஸா என்பது மூளை மண்டை நரம்பு அழற்சி, குரல்வளை நரம்பு அழற்சி, மார்புச் சளிக்காய்ச்சல் போன்ற உயிரை அச்சுறுத்தும் நோய்களை சிறு பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும் ஒரு வகை பக்டீரியாவாகும். நோய்த் தடுப்புமருந்து கிடைக்கத் தொடங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு வருடமும் பெருந்தொகையான பிள்ளைகளுக்கு ஹீமொஃபிலஸ் இன்ஃபுளுவென்ஸா மூளை மண்டை நரம்பு அழற்சி நோய் ஏற்பட்டிருக்கிறது. சிலர் அதனால் இறந்திருக்கிறார்கள். மற்றவர்கள் இந்நோயின் காரணமாக, மூளை வளர்ச்சியற்றவர்களாக, பார்வையற்றவர்களாக, காது கேளாதவர்களாக , மற்றும் பெரும்மூளை முடக்கப்பட்டவர்களாக ஆகியுள்ளார்கள். இத்தொற்று நோய்தடுப்பு மருந்தின் காரணமாக, தற்போது ஹீமொஃபிலஸ் இன்ஃபுளுவென்ஸா டைப் B தொற்றுநோய் அபூர்வமாகிவிட்டது. Hib தொற்று நோய்தடுப்பு மருந்து , வைரசால் ஏற்படும் மார்புச் சளிக்காய்ச்சல் மற்றும் மூளை மண்டை நரம்பு அழற்சி நோய் என்பனவற்றைத் தடுக்காது.
கல்லீரல் அழற்சி B (ஹெப்B) நோய்த் தடுப்பு மருந்து
கல்லீரல் அழற்சி B தொற்று நோய்தடுப்பு மருந்து, இந்த வகையான கல்லீரல் அழற்சி நோயைத் தடுக்கும். அத்துடன், இந்நோய் ஒருவரைத் தாக்கியதற்குப்பின், 20 அல்லது 30 வருடங்கள் கழித்து ஈரல் கடுமையாகப் பாதிக்கப்படுவதையும் தடுக்கிறது. ஒரு கணிசமான வயதுவந்தவர்கள் ஒவ்வொரு வருடமும், கல்லீரல் அழற்சி நோய் சம்பந்தப்பட்ட ஈரல் புற்றுநோயால் அல்லது கல்லீரல் வீக்க நோயினால் இறந்து போகிறார்கள். பிள்ளைகளில் எவ்வளவு இளமையில் தொற்றுநோய் ஏற்படுகிறதோ, அவ்வளவுக்குக் கடுமையான பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.
குழந்தையாக இருக்கும்போது கல்லீரல் அழற்சி B தொற்று நோய்தடுப்பு மருந்து கொடுக்கப்படாத, வளர்ந்த பிள்ளைகள் உங்களுக்கிருந்தால், அவன்(ள்) இத் தொற்று நோய்தடுப்பு "டோஸ்" எடுத்துக்கொள்ளலாமா என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள். உங்கள் பிள்ளைக்கு மொத்தமாக மூன்று கல்லீரல் அழற்சி B தொற்று நோய்தடுப்பு மருந்து தேவைப்படும்.
கொப்புளிப்பான் அல்லது வரிசெல்லா (Var) நோய்த்தடுப்பு மருந்து
கொப்புளிப்பான் தொற்று நோய்தடுப்பு மருந்து பெரும்பாலும் 12 மாதங்கள் மற்றும் 18 மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் கொடுக்கப்படும். ஆனால், தொற்று நோய்தடுப்பு மருந்து கொடுக்கப்படாத அல்லது இது வரை இந் நோயால் பீடிக்கப்படாத வளர்ந்த பிள்ளைகளுக்கும் இதைக் கொடுக்கலாம். 13 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு குறைந்தது நான்கு வார இடைவெளியில் இரண்டு டோஸுகள் கொடுக்கப்பட வேண்டும்.
கொப்புளிப்பான் நோயைத் தடுப்பதில் இந்த தொற்று நோய்தடுப்பு மருந்து 70% முதல்90% பலனைத் தரும். தொற்று நோய்தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கொப்புளிப்பான் நோய் வந்தால் அது மிகக் குறைந்த தீவிரமுள்ளதாயிருக்கும். தொற்று நோய்தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதனால் நீங்கள் வேலை மற்றும் பாடசாலைக்குப் போவதைத் தவற விடுவதல், தோல் சம்பந்தமான தொற்றுநோய்கள், மருத்துவச் செலவுகள், மற்றும் பிற்காலங்களில் ஷிங்கிள்ஸ் நோய் உண்டாதல் போன்ற சந்தர்ப்பங்களைக் குறைக்கலாம்.
நியூமோகொக்கல் (Pneu-C) தொற்றுநோய்த் தடுப்பு மருந்து
நியூமோகொக்கல் தொற்றுநோய்கள் என்பது மார்புச் சளிக்காய்ச்சல், இரத்த ஓட்டத் தொற்றுநோய்கள், மற்றும் மூளை மண்டை நரம்பு அழற்சி என்பனவற்றை ஏற்படுத்தும் பக்டீரியாவால் உண்டாகும் மிக கடுமையான தொற்றுநோய்களாகும். நியூமோகொக்கல் தொற்றுநோய்த் தடுப்பு மருந்து பெரும்பாலான இந்தக் கடுமையான நோய்களை உண்டாக்கும் ஏழு வகையான நியூமோகொக்கல் பக்டீரியாக்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. இந்தத் தடுப்பு மருந்து நியூமோகொக்கி கிருமியால் உண்டாகும் காதுத் தொற்றுநோயின் ஒரு சிறு சதவீதத்தையும் தடுக்கும்.
சிறு குழந்தைகள் மற்றும் நடை குழந்தைகளுக்கு தற்போது நியூமோகொக்கல் தொற்றுநோய்த் தடுப்பு மருந்தைக் கிரமமாக உபயோகிக்க சிபாரிசு செய்யப்படுகிறது. அரிவாள் உருச் சிவப்பணுச்சோகை போன்ற கடுமையான நோயுள்ள வளர்ந்த பிள்ளைகளும் இந்த நோய்த் தடுப்பு மருந்தினால் நன்மையடையலாம்.
மெனிங்கோகொக்கல் (Men-C) நோய்த் தடுப்பு மருந்து
இந்தக் கடுமையான, உயிரை அச்சுறுத்தும் தொற்றுநோய்க்கு தடுப்பு மருந்து சிசுப் பருவத்திலேயே கொடுக்கப்படுகிறது. இரண்டு மாத வயதில் தொடங்கினால், மூன்று டோஸ்கள் சிபாரிசு செய்யப்படுகின்றன; நாலு தொடக்கம் 11 மாத வயதில் தொடங்கினால், இரண்டு டோஸ்கள் சிபாரிசு செய்யப்படுகின்றன; 12 மாத வயதில் அல்லது அதற்குப் பின் தொடங்கினால், ஒரு டோஸ் சிபாரிசு செய்யப்படுகிறது.
இன்ஃபுளுவென்சா (ஃப்ளூ) நோய்த் தடுப்பு மருந்து
ஆறு முதல் 23 மாதங்கள் வயதான ஆரோக்கியமான குழந்தைகள் முடிந்தால், இன்ஃபுளூவென்ஸா நோய்த் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்; ஏனென்றால் அவர்கள் காய்ச்சல் நோயினால் கடுமையாகப் பாதிக்கப்படும் ஆபத்திலிருக்கிறார்கள் அல்லது ஃப்ளூ காரணமாக மருத்துவமனைக்குச் செல்லவேண்டியவர்களாய் இருக்கிறார்கள். குறிப்பிட்ட சில ஆபத்தான மருத்துவ காரணிகளுள்ள, ஆறு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுக் குழந்தைகளுக்கும் இன்ஃப்ளூவென்ஸா நோய்த்தடுப்பு மருந்து சிபாரிசு செய்யப்படுகிறது. நோய்த்தடுப்பாற்றல் பெற்றுக்கொள்ள விரும்பும் எவருக்கும் நோய்த் தடுப்பு மருந்து கொடுக்கப்படலாம். மேலுமான தகவல்களுக்கு உங்கள் மருத்துவ நலப் பராமாரிப்பு வழங்குபவருடன் கலந்து பேசவும்.
HPV நோய்த் தடுப்பு மருந்து
ஒன்பது முதல் 13 வயதுடைய பெண்பிள்ளைகள் ஹியூமன் பபிலொவைரஸ் (HPV) நோய்த் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். ஏனென்றால் இது பிற்காலங்களில் கருப்பை வாயில் புற்றுநோயை உண்டாக்கக் கூடும்.
வேறு தொற்றுநோய்த் தடுப்பு மருந்துகள்
ஹெப்பற்றைற்றிஸ் A நோய்த் தடுப்பு மருந்து
குறிப்பிட்ட சில பூகோளப் பிரதேசத்திலுள்ள பிள்ளைகள் மற்றும் பதின்ம வயதினருக்கும் மற்றும் மிக ஆபத்திலிருக்கும் குறிப்பிட்ட சிலருக்கும் ஹெப்பற்றைற்றிஸ் A நோய்த்தடுப்பு மருந்து சிபாரிசு செய்யப்படுகிறது. மேலுமான தகவல்களுக்கு உங்கள் மருத்துவ நலப் பராமாரிப்பு வழங்குபவர் அல்லது உள்ளூர் பொது உடல்நலத் திணைக்களகத்தாருடன் கலந்து பேசவும்.
றோட்டாவைரஸ் நோய்த் தடுப்பு மருந்து
றோட்டாவைரசுக்கு எதிராகச் செயல்படும் நோய்த்தடுப்பு மருந்து 2006ம் ஆண்டு முதல் கிடைக்கத் தொடங்கியுள்ளது. றோட்டாவைரஸ் நோய்த்தடுப்பு மருந்துகளில் ஒன்று உயிருள்ளது. இது ஒன்று முதல் இரண்டு மாத இடைவெளிகளில், இரண்டு வாய்வழி டோஸ்களாகக் கொடுக்கப்படுகிறது. மற்ற நோய்த்தடுப்பு மருந்தும் உயிருள்ளது. இது நான்கு முதல் 10 வார இடைவெளிகளில் மூன்று வாய்வழி டோஸ்களாகக் கொடுக்கப்படுகிறது. இந்த மருந்துகளின் கிடைக்கக்கூடிய தன்மைபற்றியும் அதை உங்கள் பிள்ளைக்கு எப்படி உபயோகிக்கவேண்டும் என்பது பற்றியும் உங்கள் பிள்ளையின் மருத்துவர் உங்களுடன் கலந்து பேசுவார்.
நோய்த்தடுப்பு மருந்து கொடுக்கக்கூடாது என்பதற்கான காரணங்கள்
பின்வரும் நிலைமைகளில் ஏதாவது உங்கள் பிள்ளைக்குப் பொருந்தினால், அவனு(ளு)க்கு நோய்த்தடுப்பு மருந்து கொடுப்பதற்குமுன் உங்கள் மருந்துவரிடம் கலந்து பேசவும்:
- உங்கள் பிள்ளைக்கு முந்திய நோய்த்தடுப்பு மருந்தினால் ஒவ்வாமை ஏற்பட்டது.
- உங்கள் பிள்ளைக்கு வலிப்பு நோய் அல்லது கடுமையான நரம்பியல் நோய் இருக்கிறது.
- உங்கள் பிள்ளைக்கு பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியுள்ள பிள்ளைகளுக்கு கொப்புளிப்பான் அல்லது MMR நோய்க்கான உயிருள்ள வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்படக்கூடாது. ஏனென்றால் உயிருள்ள வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்து அதை உட்செலுத்தப்பட்டவரின் உடலுக்குள் உயிர்வாழ்ந்து பிரிவடையும். நோய் எதிர்ப்பு சக்தி மிகப் பலவீனமாக இருந்தால் அந்த வைரசுக்கள் நிஜமான நோயையே உண்டாக்கிவிடும்.
- உங்கள் பிள்ளைக்கு முட்டை ஒவ்வாமை இருக்கிறது. முட்டைகளுக்குக் கடும் ஒவ்வாமையுள்ள பிள்ளைகள் இன்ஃப்ளூவென்ஸா நோய்த் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆயினும், முட்டைகளுக்கு ஒவ்வாமையுள்ள பிள்ளைகள் எல்லாக் கிரம தடுப்பு மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம். சின்னமுத்து மற்றும் கூகைக்கட்டுத் தடுப்பு மருந்துகள் கோழிக்குஞ்சுகளின் கலங்களில் வளர்ந்தாலும், இந்தத் தடுப்பு மருந்துகளிலிருந்து முட்டையிலுள்ள புரதங்கள் அகற்றப்பட்டுள்ளன. எனவே உங்கள் பிள்ளை, முட்டைக்கு ஒவ்வாமைஉள்ளவனா(ளா) என்பதைப் தோல்ப் பரிசோதனை செய்யாமலேயே இந்தத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கலாம்.
நோய்த்தடுப்பு மருந்து கொடுக்கப்படாததற்கான அவசியமற்ற காரணங்கள்
தேவையற்ற முன்னெச்சரிக்கைகள் சில பெற்றோர்களை, நோய்த்தடுப்பு மருந்துக்கான அட்டவணையை தள்ளிப்போட அல்லது ரத்து செய்ய வைக்கிறது. நோய்த்தடுப்பு மருந்துகளின் அட்டவணையை தள்ளிப்போட அல்லது ரத்து செய்ய அவசியமற்ற காரணங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளன. கீழ்க் காண்பனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலைமைகள் இருந்தால்க்கூட பிள்ளை தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ளலாம்:
- முந்திய DTaP வேளை மருந்துக்குப் பின்னர் தடுப்பூசி போடப்பட்ட பகுதியில், பிள்ளைக்கு புண் வலி, சிவத்தல், அல்லது வீக்கம் இருந்தது.
- முந்திய DTaP மருந்துக்குப்பின்னர் பிள்ளைக்கு 40.5 ℃ (105℉) க்குக் குறைவான காய்ச்சல் இருந்தது.
- பிள்ளைக்கு காய்ச்சல் இல்லாமல் தடிமல், இருமல், அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இலேசான சுகவீனம் இருக்கின்றது.
- பிள்ளை தடிமல், இருமல், அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இலேசான சுகவீனத்திலிருந்து தேறிவருகிறான்.
- பிள்ளை சமீபத்தில் ஒரு தொற்று நோயுடன் தொடர்பு கொண்டிருந்தான்
- பிள்ளை அன்டிபையோடிக் மருந்துகளை உட்கொள்ளுகிறான்
- பிள்ளை குறைப் பிரசவத்தில் பிறந்திருக்கிறது
- பிள்ளையின் தாய் கர்ப்பமாயிருக்கிறார்
- பிள்ளை தாய்ப்பால் குடிக்கிறது
- பிள்ளைக்கு ஒவ்வாமை இருக்கிறது, முட்டை ஒவ்வாமை அல்லாமல்
- பிள்ளையின் குடும்பத்தாருக்கு வலிப்புநோய்கள் அல்லது திடீர் குழந்தை மரணத்துக்கான கூட்டறிகுறி (SIDS) களின் சரித்திரம் இருக்கிறது.