ஒற்றை உட்கரு அணுமிகைப்பு (தொற்றும் தன்மையுள்ள ஒற்றை உட்கரு அணுமிகைப்பு)

Mononucleosis [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

ஒற்றை உட்கரு அணுமிகைப்பு என்பது கிருமித் தொற்றுள்ள உமிழ்நீரினால் பரப்பப்படுகின்ற ஒரு வைரஸ் தொற்றுநோயாகும். பிள்ளைகளின் ஒற்றை உட்கரு அணுமிகைப்பு காரணங்கள் மற்றும் அது எவ்வாறு சிகிச்சையளிக்கப் படுகிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

ஒற்றை உட்கரு அணுமிகைப்பு (மோனோனியுகிளியோசிஸ்) என்பது என்ன?

உட்கரு அணுமிகைப்பு (மோனோ) என்பது எப்ஸ்டீன்–பார் (EBV) வைரஸால் ஏற்படுத்தபடும் ஒரு வைரஸ் தொற்றுநோயாகும். இந்த வைரஸானது கிருமித்தொற்றுள்ள உமிழ்நீரினால் கடத்தப்படுகிறது. இது ஒரே தண்ணீர்க் குவழை, பாத்திரங்கள் அல்லது உணவு போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல் அல்லது இருமல், தும்மல் மற்றும் முத்தமிடுதல் என்பவற்றால் ஏற்படலாம்.

பரவலான நம்பிக்கைக்கு மாறாக, மோனோ இலகுவில் தொற்றக்கூடியதல்ல. ஒரே வீட்டில் வசிப்பவர்கள் அரிதாகவே ஒரே நேரத்தில் இக்கிருமித்தொற்றுக்கு ஆளாகிறார்கள். 15 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே இது மிகவும் சாதாரணமாகக் காணப்படுகிறது. இது மற்றவர்களோடு நெருங்கிய அல்லது அந்தரங்க தொடர்புகள் வைத்திருப்பதன் காரணமாக இருக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு, EBV தொற்றுநோய், வழ்க்கமாக சிசுப்பருவத்தில அல்லது பிள்ளைப்பருவத்தில், மோனோவின் வழக்கமான அறிகுறிகள் இல்லாமலேயே ஏற்படுகின்றது.

மோனோ நோயின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

பிள்ளைகளில், மோனோ நோய் பெரும்பாலும் அறிகுறிகள் எதையும் காட்டாது. அதாவது, இது ஒரு சில அறிகுறிகளைக் காட்டும் அல்லது ஒரு அறிகுறியையும் காட்டாது. பெரும்பாலும் பிள்ளைகள் தடிமலுக்கான மிகவும் சிறிய அறிகுறிகளை அல்லது கடுமையற்றது முதல் மிதமான காய்ச்சலை மாத்திரம் கொண்டிருப்பார்கள். இந்தக் காய்ச்சல் 2 வாரங்கள்வரை நீடிக்கலாம். இது ஆபத்தானதல்ல.

பதின்ம வயதினரும் (டீன்ஸ்) இளைஞர்களும், மோனோ நோயின் அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள். இவை பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • தொண்டையில் மிகுந்த வலி
  • களைப்பு, பெலன் இன்மை மற்றும் உடல் வலிகள்
  • கொட்டேஜ் பாலாடைக்கட்டி போல் தோன்றும், சிதலால் மூடப்பட்ட பெரிய சிகப்பு உள்நாக்கு (டொன்சில்)
  • கழுத்தில், கமக்கட்டில், கவட்டில் மற்றும் உடலின் வேறு பகுதிகளில், வீங்கிய நிணநீர் சுரப்பிகள்,
  • 7-14 நாள் வரையாக காய்ச்சல்
  • வீங்கிய மண்ணீரல் ( ஏறத்தாழ 2 இல் 1 பிள்ளை இந்த அறிகுறியைக் கொண்டிருக்கும்)
  • வீங்கிய மண்ணீரல்
  • ஒரு சொறி (அரிப்பு)

அநேக பிள்ளைகள், லேசான அறிகுறிகளை மட்டும் ஒரு வாரத்துக்கு கொண்டிருப்பார்கள். கடுமையான அறிகுறிகளைக் கொண்டவர்கள்கூடப் பெரும்பாலும் 2 லிருந்து 4 வாரங்களில் நிவாரணமடைகிறார்கள்

மோனோநியூக்ளியோசிஸின் சிக்கல்கள்

மோனோ நோய் உள்ள பெரும்பாலான பிள்ளைகள் வீட்டில் பராமரிக்கப்படலாம். உங்கள் பிள்ளைக்கு மருத்துவமனைக்குச் செல்லவேண்டியை தேவை இல்லாதிருக்கலாம். சிலவேளைகளில் மொனோ நோயினால் சிக்கல்கள் ஏற்பட்டு மருத்துவரால் பார்வையிடவேண்டியிருக்கலாம். சிக்கல்கள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

உடலில் நீர்வறட்சி

போதியளவு பானம் அருந்தாததால், நீர்வறட்சி ஏற்படுவதே, மோனோவால் எற்படும் மிகப்பொதுவான சிக்கலாகும். பிள்ளைக்கு அடிக்கடி பானம் பருக கொடுப்பதன்மூலம் இதை தவிர்த்திடுங்கள்.

வீங்கிய மண்ணீரல்

மோனோவின்போது உங்கள் பிள்ளையின் மண்ணீரல் வீங்கியிருக்கலாம் என்பதால் அவளின் வயிற்றை அல்லது முதுகின் கீழ்ப்பகுதியை பாதுகாப்பது முக்கியமானதாகும். வயிற்றில் ஒரு அடிபட்டால் அது வீங்கிய மண்ணீரலைக் கிழித்து உடலினுள் இரத்தக்கசிவை ஏற்படுத்தலாம். இது ஒரு அவசர நிலையாகும்.

மோனோ நோயுள்ள எல்லாப் பிள்ளைகளும் குறைந்தது 4 வாரங்களுக்கு அல்லது மருத்துவர் தெரிவிக்கும்வரை தொடர்புப் போட்டி விளையாட்டுகளைகத் தவிர்க்கவேண்டும். மண்ணீரல் சாதாரண நிலைக்குத் திரும்பும்வரை போட்டி விளையாட்டாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த வேண்டும்.

மலச்சிக்கலைத் தடுக்க முயற்சிக்கவும். உங்கள் பிள்ளை பாரம் தூக்குவதையும் தவிர்க்கவேண்டும். இவை மண்ணீரலில் திடீர் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

உங்கள் பிள்ளை, வயிற்றில் திடீரென கடுமையான வலியைக் கொண்டிருந்தால் அவளை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச்செல்லுங்கள்.

சுவாசிப்பதில் சிரமம்

உங்கள் பிள்ளை சுவாசிக்க சிரமப்படலாம். வீங்கிய உள்நாக்கு, அடினாயிட்டு, மற்றும் தொண்டையின் பின் பகுதியில் உள்ள, நிணநீர் திசுக்கள் ஆகியவற்றால், காற்றுக் குழாய் ஓரளவுக்கு அடைபட்டிருக்கலாம். “ஏதொவொன்று அடைபட்டிருப்பதை போன்ற” உணர்வுவாக அவள் அதை விவரிக்கலாம். அடைப்பு ஆபத்திருகின்றதா என்பதை அறிவதற்காக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அவளின் தொண்டையை பரிசோதனை செய்யலாம். தொண்டை வீக்கத்தைக் குறைப்பதற்காக உங்கள் பிள்ளைக்கு மருந்து தேவைப்படலாம்.

சொறி

மொனோ நோயுள்ள சில பிள்ளைகள், அம்பிசிலின் அல்லது அமொக்சிலின் போன்ற அன்டிபையோடிக்ஸ் மருந்தை எடுத்தால், அவர்களுக்குக் கடுமையான ஒரு சொறி ஏற்படலாம். உங்கள் பிள்ளைக்கு மோனோ நோய் இருந்தால இந்த மருந்துகள் தவிர்க்கப்பட வேண்டும். உங்கள் பிள்ளைக்கு மோனோவும் ஒரு பக்டீரியா தொற்றுநோயும் இருக்கிறது என உங்கள் பிள்ளையின் மருத்துவர் சந்தேகித்தால், வேறு அன்டிபையோடிக் மருந்துகளைப் பாதுகாப்பாக உபயோகிக்கலாம்.

நீடித்த களைப்பு அறிகுறி

நீடித்த களைப்புக்கான அறிகுறிகள், அளவுக்கதிகமான களைப்பு, பலவீனம், மீண்டும் மீண்டும் வரும் வலி என்பனவாகும். இந்த அறிகுறிகள் குறைந்தது 6 மாதங்களுக்கு நீடிக்கும்.

மோனோ நோய்க்கு உங்கள் மருத்துவர் என்ன செய்யலாம்

உங்கள் பிள்ளையை பரிசோதித்தல்

உங்கள் பிள்ளையின் அறிகுறிகள் பற்றி உங்களிடம் கேட்பதன் மூலமும், பிள்ளையைப் பரிசோதிப்பதன் மூலமும், மற்றும் ஒரு வேளை இரத்தப் பரிசோதனை செய்வதன் மூலமும் உங்கள் பிள்ளையின் மருத்துவர் மோனோ நோயைக் கண்டறிவார்.

மருந்துகள்

இந்த வைரஸுக்கு சிகிச்சையளிக்க குறிப்பிட்ட மருந்துகளேதுமில்லை. உடலின் நோயெதிர்ப்புத் தொகுதி தொற்றுநோயை எதிர்த்துப் போரிடும். உங்கள் பிள்ளையின் செளகரியத்தை முன்னேற்றமடையச் செய்வதே சிகிச்சையளிப்பதின் முக்கிய காரணமாகும்.

டொன்சில்கள் ஒன்றை ஒன்று தொடுமளவுக்கு மிகப் பெரிதாக வீங்கியிருந்தால், வீக்கத்தைக் குறைப்பதற்கு, மருத்துவர், ஸ்டேரொயிட் மருந்தைச் சிபாரிசு செய்யலாம்.

மோனோ நோயுள்ள உங்கள் பிள்ளையை வீட்டில் வைத்துப் பராமரித்தல்

காய்ச்சல் மற்றும் வலிக்கான மருந்துகள்

அசெட்டமினோஃபென் (டைலெனோல், டெம்ப்ரா, அல்லது வேறு பிராண்டுகள்) அல்லது ஐபியூப்ரொஃபேன் (அட்வில், மோட்ரின் அல்லது வேறு பிரான்டுகள்) போன்ற மருந்துகள் மூலம், வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகளின் அசௌகரியம் மற்றும் காய்ச்சல் பெரும்பாலும் நிவாரணமடையலாம்.

திரவ உணவுகள்

உங்கள் பிள்ளை அதிகளவு நீராகாரங்களைப் பருகுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மில்க்க்ஷேக் மற்றும் குளிர் பானங்கள் மிகவும் நல்லது. 1 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள் இளஞ்சூடான கோழி சூப்பை உறிஞ்சலாம்.

பின்வருவனவை இருந்தால் உங்கள் பிள்ளை போதுமான நீராகரத்தைக் பெற்றுக்கொள்கிறது:

  • ஒரு நாளில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்கிறாள்
  • அவள் அழும்போது கண்ணீர் வடிகிறது மற்றும் ஈரமான கண்கள்
  • அவளுடைய வாய் ஈரமாகவும் உமிழ்நீர் கொண்டதாயும் இருக்கின்றது

தொண்டை வலிக்கு சிகிச்சை

உங்கள் பிள்ளை உணவு உண்ணும்போது அல்லது பானங்கள் குடிக்கும்போது வலியை உணர்ந்தால் பின்வருவனவற்றை முயற்சி செய்யவும்:

  • சூப்புகள், ஐஸ் கிறீம், புடிங் அல்லது யோகட் போன்ற இலகுவில் விழுங்கக்கூடிய மென்மையான உணவுகளைக் கொடுக்கவும்.
  • அதிக உப்புள்ள, உறைப்பான, அமிலத்தன்மை அல்லது சிட்ரஸ் அதாவது தோடை, எலுமிச்சை போன்ற உணவுகள் வலியை மோசமாக்குமானால் அவற்றைத் தவிருங்கள்.
  • நிறைய திரவ உணவைக் கொடுங்கள். ஒரு ஸ்ட்ரோ மூலம் உறிஞ்சுவது அல்லது உறிஞ்சும் கோப்பை உதவக்கூடும்.
  • உங்கள் பிள்ளை 1 வயதுக்கு மேற்படட்தானால், தொண்டையை ஆற்றவும் இருமலுக்கு உதவவும், 1 லிருந்து 2 தேக்கரண்டிகள் (5 லிருந்து 10 mL) கிருமிநீக்கிய (பஸ்ஷுரைஸ்ட்) தேன் கொடுக்க முயலுங்கள்.
  • வளர்ந்த பிள்ளைகள் இளம் சூட்டு உப்பு நீரால் வாயை கொப்பளிக்க முயற்சிசெய்யலாம்.
  • ஐஸ் கட்டிகளும் லொசிஞ்ஜர்களும், வளர்ந்த பிள்ளைகள் அல்லது பதின்ம வயதினருக்கு சற்று நிவாரணமளிக்கலாம். அவை மூச்சடைக்கச் செய்யக்கூடியவை என்பதால், இளம் பிள்ளைகளுக்கு அவற்றைக் கொடுக்க வேண்டாம்.

ஓய்வும் நடவடிக்ககைகளும்

உங்கள் பிள்ளை படுக்கையிலேயே இருக்கவோ அல்லது தனிமைப்படுத்தப்படவோ அவசியமில்லை. எவ்வளவு ஓய்வுதேவை என்பதை அவளே தெரிவுசெய்யலாம். வழக்கமாகப் பிள்ளைகள் காய்ச்சல் இருக்கும்போது இயக்கத்தில் குறைந்து பின் மீண்டும் அதிக சுறுசுறுப்பாவார்கள்.

காய்ச்சல் போய், வழக்கம்போல் விழுங்க முடியும்போது பிள்ளைகள் மீண்டும் பாடசாலைக்குச் செல்லலாம். பெரும்பான்மையான பிள்ளைகள் 2 லிருந்து 4 வாரங்களுக்குள் மீண்டும் தங்கள் முழு நடவடிக்கைகளுக்கும் திரும்ப விரும்புவார்கள்.

காய்ச்சல் நிவாரணமடைந்து, வழக்கம்போல் விழுங்க முடியும் நிலை வரும்போது பிள்ளைகள் பாடசாலைக்குத் திரும்பலாம். பெரும்பாலான பிள்ளைகள் 2 முதல் 4 வாரங்களுக்குள் மீண்டும் தங்கள் வழக்கமான நடவடிக்கைகளுக்குத் திரும்ப விரும்புவார்கள்.

வைரஸ் அல்லது தொற்றுநோய் பரவுவதை எப்படிக் குறைக்கலாம்

பிள்ளைக்குக் காய்ச்சலிருக்கும்போதுதான் மோனோ அதிக தொற்றும் தன்மையுள்ளதாக இருக்கின்றது. காய்ச்சல் போனபின்பு 6 மாதங்கள்வரை உமிழ்நீரில் சிறிய அளவில் வைரஸ் காணப்படலாம். மோனோ உள்ள உங்கள் பிள்ளையைத் தனிமைப்படுத்தத் தேவையில்லை. தனித்தனியான குடிக்கும் குவளைகளையும் வேறு பாத்திரங்களையும் உபயோகிப்பதன் மூலம் வைரஸ் பரவுவதைத் தவிர்க்கவும். அத்துடன், காய்ச்சல் போய் பல நாட்கள்வரைக்கும் முத்தமிடுவதையும் தவிர்க்கவும்.

நோய்த்தொற்றுள்ள நபருடன் தொடர்புக்கு வந்தபின், மோனோ வின் அடைகாக்குங் காலம் 4 இலிருந்து 10 வாரங்களாகும். அதாவது உங்கள் பிள்ளைக்கு வைரஸ் நோய் தொற்றி 4 லிருந்து 10 வாரங்கள் வரை அவள் சுகவீனமுற்றவளாகக் உணரவோ அல்லது காணப்படவோ மாட்டாள்.

மருத்துவ உதவியை எப்போது நாடுவது

பின்வரும் நிலைமைகளின் போது உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழையுங்கள்:

  • உங்கள் பிள்ளையால் போதிய திரவ உணவை உட்கொள்ள முடியவில்லை
  • சைனஸ் அல்லது காதுவலி இருக்கின்றது
  • மோனோ இருக்கின்றதென நோய்க்கண்டுபிடிப்பு செய்து 2 வாரங்களுக்குப் பின்னும் பிள்ளை பாடசாலைக்கு மீண்டும் செல்ல முடியவில்லை
  • 4 வாரங்களுக்குப் பின்னும் அறிகுறிகள் காணப்படுகின்றன.
  • உங்களுக்கு வேறு கேள்விகள் அல்லது கவலைகள் இருக்கின்றன

பின்வருவனவரும் நிலைகள் காணப்பட்டால், பிள்ளையை மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லுங்கள்:

  • உடல் நீர்வறட்சியடைந்திருக்கின்றது
  • சுவாசிப்பதில் கஷ்டம் இருக்கிறது
  • வயிற்று வலி குறிப்பாக பிள்ளையின் இடது பக்கத்தில் அதிகமாக இருக்கின்றது
  • பிள்ளை மிகவும் சுகவீனமாகத் தோன்ற ஆரம்பிக்கின்றது

முக்கிய குறிப்புகள்

  • மோனோ என்பது, இளம் பிள்ளைகளில் காய்ச்சலை உண்டாக்கும் ஒரு வகையான வைரஸ் தொற்றுநோயாகும்.
  • மொனோ நோயுள்ள பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களுக்கு பெரும்பாலும் காய்ச்சலுடன் வேறு அறிகுறிகளும் இருக்கும்.
  • உங்கள் பிள்ளையின் உடல் நோயுடன் போராடும்போது அவளை சௌகரியமாகவும் உடல் நீரேற்றத்துடனும் வைத்திருக்கவும்.
  • மண்ணீரலில் காயமேற்பட்டால் உடலுக்குள் கடும் இரத்தக் கசிவுகள் ஏற்படலாம். அதனால். போட்டி விளையாட்டுகளையும் பாரம் தூக்குவதையும் தவிர்த்திடவும்.
Last updated: மார்ச் 05 2010