முக்கிய குறிப்புகள்
- வீக்கமுண்டாக்குகிற குடல் நோய் என்பது சமிபாட்டுத் தொகுதியின் பாகத்தில் ஏற்படும் வீக்கம்.
- இந்த வீக்கம் தகுந்த உறிஞ்சுதல் மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தடை செய்யும்.
- வீக்கமுண்டாக்குகிற குடல் நோயையுடைய அநேகர் அறிகுறிகளைக் குறைப்பதற்காக மற்றும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காகத் தங்கள் உணவுமுறையை மாற்றலாம்.
வீக்கமுண்டாக்குகிற குடல் நோய் என்றால் என்ன??
வீக்கமுண்டாக்குகிற குடல் நோய் (IBD) என்பது சிறிய அல்லது பெரும் குடல் வீங்கும் ஒரு நிலைமையாகும்.
அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
வீக்கமுண்டாக்குகிற குடல் நோய்க்கான முக்கிய அறிகுறி வயிற்றுப்போக்கு, உப்புதல், வயிற்றுவலி, வயிற்றில் தசைப்பிடிப்பு, மற்றும் உடல் எடை இழப்பு என்பனவாகும். வீக்கமுண்டாக்குகிற குடல் நோய் வந்து போகும். இதனால் “திடீரென வெளிப்பட” முடியும் மற்றும் உங்கள் பிள்ளைக்கு அறிகுறிகள் தோன்றும். வேறு சமயங்களில், உங்கள் பிள்ளைக்கு அறிகுறிகள் இருக்காது. இது பின்வாங்குதல் என அழைக்கப்படும். தீடிர் வெளிப்பாடுகள் மற்றும் பின்வாங்குதல், வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு சமயங்களில் சம்பவிக்கும்.
வீக்கமுண்டாக்குகிற குடல் நோயில் (IBD) இரண்டு வகைகள் இருக்கின்றன: கிரானின் நோய்(Crohn’s disease) மற்றும் புண்களுள்ள பெருங்குடலழற்சி
- கிரானின் நோய் என்பது சமிபாட்டுத் தொகுதியில் வாய் முதல் மலவாயில் வரை ஏதாவது பகுதியில் வீக்கம் உண்டாதல்
- புண்களுள்ள பெருங்குடலழற்சி என்பது பெருங்குடலில் மாத்திரம் வீக்கம் உண்டாதல்
வீக்கமுண்டாக்குகிற குடல் நோய், எரிச்சலூட்டும் குடல் நோய்க்கூட்டறிகுறிகள் போன்றதல்ல.
காரணங்கள்
வீக்கமுண்டாக்குகிற குடல் நோய்க்கான காரணம் அறியப்படவில்லை. இந்த நோயின் குடும்ப வரலாறு மற்றும் வேறு நோய்த்தடுப்பு தொடர்பான காரணிகள் ஆபத்தை அதிகரிக்கும். வீக்கமுண்டாக்குகிற குடல் நோய் குறிப்பிட்ட சில உணவுகளை உண்பதால் ஏற்படுவதல்ல. உணவு நஞ்சாதலினால், வீக்கமுண்டாக்குகிற குடல் நோய் ஏற்படாது.
உங்கள் பிள்ளைக்கு உதவி செய்வதற்கு ஒரு மருத்துவர் என்ன செய்யலாம்
ஒரு சில நாட்களுக்கு மேலாக அறிகுறிகள் தொடர்ந்திருந்தால், உங்கள் பிள்ளையை மருத்துவரிடம் கொண்டு செல்லவும். மருத்துவர், வீக்கமுண்டாக்குகிற குடல் நோய் இருப்பதாகச் சந்தேகித்தால், குடற் பரிசோதனைகள் செய்வார். எக்ஸ்-ரே எடுப்பதற்காக, உங்கள் பிள்ளை பேரியம் என அழைக்கப்படும் ஒரு வெள்ளை சுண்ணக்கட்டித் திரவத்தை விழுங்கவேண்டும்.
சிகிச்சை
உங்கள் பிள்ளையின் நோயைக் கண்டறிதலுக்கேற்ப வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் மருந்து எழுதிக்கொடுக்கப்படலாம். கிரானின் நோயின் கடுமையான நிலைமைகளில் உங்கள் பிள்ளைக்கு ஒரு திரவ உணவு கொடுக்கப்படவேண்டும் அல்லது மருத்து அல்லது உணவு நரம்பினூடாகச் செலுத்தப்படவேண்டும். பெரும்பாலான பிள்ளைகள், ஒரு நல்ல சமநிலையான உணவை உண்பதன் மூலம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். புண்களுள்ள பெருங்குடலழற்சியின் கடுமையான நிலைமைகளில், சேதமடைந்த பெருங்குடல் பகுதியை அகற்றுவதற்காக அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
சில உணவுகள் வீக்கமுண்டாக்குகிற குடல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உதவி செய்வதாக உரிமை கொண்டாடப்பட்டுள்ளன. ஆனால் இந்த உணவுகள் எதுவுமே உதவி செய்ததாக நிரூபிக்கப்படவில்லை. உங்கள் பிள்ளை ஒரு விசேஷ உணவுமுறையில் இருந்தால் அல்லது குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்த்தால், உங்கள் மருத்துவர் அல்லது நலஉணவு வல்லுனரிடம் பேசவும். உங்கள் பிள்ளையின் நல்லாரோக்கியத்துக்குத் தேவையான உட்டச்சத்துகளை அவள் இன்னமும் பெற்றுக்கொள்கிறாளா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள அவை உதவி செய்யும். உங்கள் பிள்ளையின் உணவுமுறை அவளின் தேவைகளைப் பொறுத்திருக்கும்.