ஹைப்பர்டோனிக் உப்பு நீர் ஊறல் என்பது செறிவு கூடிய உப்பு நீரில் ஊற வைக்கப்பட்ட ஒரு சல்லடைத்துணியாகும்.
உங்கள் பிள்ளையின் ஸ்டோமாவில் சிவந்த நிறம் அல்லது வீக்கம் அல்லது அதில் ஹைப்பர் கிரானுலேஷன் திசு (ஆறிவரும் புண்கள் மீது அளவுக்கதிகமாக உருவாகும் குருமணித் திசு) போன்ற பிரச்சினைகள் இருந்தால். ஹைப்பர் கிரானுலேஷன் திசு என்பது ஈரமாக இருக்கின்ற மற்றும் பெரும்பாலும் எளிதில் இரத்தம் வருகின்ற மேடான அல்லது வீங்கிய திசு ஆகும். இது வேதனை தருவதாகவும் இருக்கலாம். ஹைப்பர்டோனிக் உப்பு நீர் ஊறல்களை ஹைப்பர் கிரானுலேஷன் திசுக்களில் வைப்பது அவை குணமடைய உதவும்.
ஹைப்பர்டோனிக் உப்பு நீர் ஊறலில் உள்ள அதிகப்படியான உப்பு திசுக்களில் இருந்து ஈரப்பதத்தை இழுக்கவும், சருமத்தை உலர்த்தவும், வீக்கத்தையும் சிவப்பையும் குறைக்கவும் உதவுகின்றது. ஹைப்பர் கிரானுலேஷன் திசுக்களைத் தடுக்க அல்லது சிகிச்சையளிப்பதற்கான முதற் படி இதுதான்.
சிலர் இவற்றை “சேலைன் ஊறல்கள்” எனக் குறிப்பிடுகின்றனர், ஆனால் இது சரியானதல்ல, ஏனெனில் சேலைன் கரைசலில் போதுமான அளவு உப்பு இல்லை. கடையில் வாங்கக் கூடியமாதிரி உப்புக் கரைசலை நீங்கள் கண்டால், அதனை வாங்கவோ அல்லது ஹைப்பர் கிரானுலேஷன் திசுக்களுக்கு (ஆறிவரும் புண்கள் மீது அளவுக்கதிகமாக உருவாகும் குருமணித் திசுக்கள்) அதனைக் கொண்டு சிகிச்சையளிக்கவோ பயன்படுத்த வேண்டாம் - அதில் சரியான உப்புச் செறிவு இல்லை.
உங்களுக்குரிய ஹைப்பர்டோனிக் உப்பு நீர் ஊறலைச் சுயமாகத் தயாரித்தல்
உங்களுக்குரிய ஹைப்பர்டோனிக் உப்பு நீர் ஊறலைச் சுயமாகத் தயாரித்தல் எவ்வாறு என்பது இங்கே தரப்பட்டுள்ளது:
<>- சுத்தமான ஒரு கப் அல்லது கிண்ணத்தில் 2 தேக்கரண்டி மேசை உப்பை 1 கப் இளஞ்சூடான நீரில் இட்டு உப்புக் கரையும் வரைக் கலக்கவும்.
-
சல்லடைத்துணி ஒன்றில் "Y" வடிவ அமைப்பில் துண்டு ஒன்றை வெட்டவும்.
- இந்த சல்லடைத்துணியை உப்பு நீரில் ஊறவைத்துப், பின்னர் சிறிது நீரைப் பிழிந்து விடுங்கள், அதனால் சல்லடைத்துணியில் ஈரம் சொட்டாது.
- உணவூட்டல் குழாயைச் சுற்றியுள்ள சருமத்தில் ஈரமான சல்லடைத்துணியை வைக்கவும், சல்லடைத்துணி குளிர்ச்சியாகும் வரை அதை அங்கேயே விடவும். இதற்கு சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் எடுக்கும். சல்லடைத்துணியை உலர விட வேண்டாம். சல்லடைத்துணி மிகவும் காய்ந்திருந்தால், அதனை அகற்றும்போது அது ஸ்டோமாவை இழுத்து வலியை ஏற்படுத்தக்கூடும்.
- சல்லடைத்துணி குளிர்ந்ததும், அதனை அகற்றிவிட்டு, ஸ்டோமாவைக் காற்றுப்பட்டு உலர்வதற்காகத் திறந்து விடவும். சருமத்தில் உள்ள உப்பைப் பின்னர் நீங்கள் கழுவத் தேவையில்லை.
உங்கள் பிள்ளைக்கு ஸ்டோமாவில் பிரச்சினைகள் இருக்கும்போது ஹைப்பர்டோனிக் உப்பு நீர் ஊறல்களை ஒரு நாளைக்கு நான்கு முறை வைக்கலாம்.
அந்த இடத்தில் சிவந்திருந்தால், வீக்கம் அல்லது வலி போன்ற நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருந்தால், அதனை மதிப்பீடு செய்வதற்கு உங்கள் மருத்துவரை அழைக்கவும் அல்லது சென்று காணவும்.
ஹைப்பர் கிரானுலேஷன் திசுக்களுக்கு (ஆறிவரும் புண்கள் மீது அளவுக்கதிகமாக உருவாகும் குருமணித் திசுக்கள்) சிகிச்சை பெறுவதற்காக உங்கள் பிள்ளை அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லத் தேவையில்லை.
>