உங்கள் பிள்ளை பின்வருவனவற்றுள் ஒரு மருந்தை உட்கொள்ளவேண்டும். பிரெட்னிஸோன், பிரெட்னிஸொலோன், அல்லது டெக்ஸமெத்தஸோன். இந்த மருந்துகள் என்ன செய்கின்றன, இவற்றை எப்படிக் கொடுக்கவேண்டும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும். உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை ஒ
உங்கள் பிள்ளை பின்வருவனவற்றுள் ஒரு மருந்தை உட்கொள்ளவேண்டும். பிரெட்னிஸோன், பிரெட்னிஸொலோன், அல்லது டெக்ஸமெத்தஸோன். இந்த மருந்துகள் என்ன செய்கின்றன, இவற்றை எப்படிக் கொடுக்கவேண்டும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும். உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை ஒரு குறுகிய காலத்துக்கு (7 நாட்களுக்கும் குறைவாக) உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றியும் இது விளக்குகிறது.
இந்த மருந்து எப்படிப்பட்டது?
பிரெட்னிஸோன், பிரெட்னிஸொலோன், மற்றும் டெக்ஸமெத்தஸோன் என்பன நுரையீரல் காற்றுக் குழாய்களின் வீக்கத்தை நீக்க உதவி செய்யும் மருந்துகளாகும். உங்கள் பிள்ளைக்கு ஆஸ்துமா பிரச்சினைகள் இருக்கும்போது ஒரு சில நாட்களுக்கு மாத்திரம் அவன்(ள்) இந்த மருந்துகளை உட்கொள்ளவேண்டியிருக்கும்.
இந்த மருந்துகள் கோர்டிகொஸ்டெயிரொயிட்டுகள் என்று அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். இந்த கோர்டிகொஸ்டெயிரொயிட்டுகளும், உடற்பயிற்சிப் போட்டியாளர்கள் போட்டி விளையாட்டுகளில் தங்களை மேம்பாடடையச் செய்வதற்காக உட்கொள்ளும் ஸ்டெரோயிட்டுகளும் ஒரே வகையைச் சேர்ந்தனவல்ல. இந்த மருந்துகள், உடற்பயிற்சிப் போட்டியாளர்கள் உபயோகிக்கும் ஸ்டெரோயிட்டுகள் ஏற்படுத்தும் அதே பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்?
உங்கள் பிள்ளைக்கு கோர்டிகொஸ்டெயிரொயிட்ஸ் மருந்தைக் கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:
- உங்கள் பிள்ளைக்கு கோர்டிகொஸ்டெயிரொயிட்ஸ் மருந்தை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்டது போல துல்லியமாக, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தாலும் கூட, தொடர்ந்து கொடுக்கவும். உங்கள் பிள்ளைக்கு கோர்டிகொஸ்டெயிரொயிட்ஸ் மருந்து கொடுப்பதை, உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் நிறுத்தச் சொன்னால் மாத்திரம் நிறுத்தவும்.
- உங்கள் பிள்ளைக்கு கோர்டிகொஸ்டெயிரொயிட்ஸ் மருந்தை உணவுடன் கொடுக்கவும்.
- ஒவ்வொரு நாளும் காலையில் அதே நேரத்தில், உங்கள் பிள்ளைக்கு கோர்டிகொஸ்டெயிரொயிட்ஸ் மருந்தைக் கொடுக்கவும். மருந்து கொடுக்கும் நேரத்தைத் தவறவிடாதிருப்பதற்காக, உங்களுக்கு இலகுவாக நினைவிலிருக்கக்கூடிய ஒரு நேரத்தைத் தெரிவு செய்யவும்.
- உங்கள் பிள்ளை கோர்டிகொஸ்டெயிரொயிட்ஸ் மருந்தைத் திரவ வடிவத்தில் உட்கொள்வதாக இருந்தால், மருந்தைக் கொடுப்பதற்கு முன்னர் போத்தலை நன்றாகக் குலுக்கவும்.
- உங்கள் பிள்ளை கோர்டிகொஸ்டெயிரொயிட்ஸ் மருந்தைத் திரவ வடிவத்தில் உட்கொள்வதாக இருந்தால், மருந்தாளர் உங்களுக்குக் கொடுத்த விசேஷ கரண்டி அல்லது பீச்சாங்குழாயினால் கொடுக்கவும். ஒரு பீச்சாங்குழாய் என்பது ஒரு தண்டுள்ள மற்றும் மருந்தைக் கொண்டிருக்கக்கூடிய ஒரு துவாரமுள்ள குழாய்.
உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?
உங்கள் பிள்ளை கோர்டிகொஸ்டெயிரொயிட்ஸ் மருந்தின் ஒருவேளை மருந்தைத் தவறவிட்டால் பின்வருவனவற்றைச் செய்யவும்:
- உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
- அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும்.
- உங்கள் பிள்ளைக்கு அடுத்த வேளைமருந்தை வழக்கமான நேரத்தில் கொடுக்கவும்.
இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?
உங்கள் பிள்ளை கோர்டிகொஸ்டெயிரொயிட்ஸ் மருந்தை, நீண்ட நாட்களுக்குப் பதிலாக, ஒரு சில நாட்களுக்கு மாத்திரமே உட்கொள்வதால் அவன்(ள்) மிகக் குறைந்தளவு பக்க விளைவுகளை கொண்டிருக்கலாம் அல்லது பக்கவிளைவுகள் எதுவும் இல்லாதிருக்கலாம். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும்:
- வயிற்றுக் குழப்பம்
- வாந்தி
- வழக்கத்துக்கு மாறான அதிக பசி
- தலைவலி
- மயக்க உணர்வு
- அமைதியற்ற நிலை
உங்கள் பிள்ளையின் நடத்தையில் மாற்றம் இருந்தால் அல்லது தார் போன்று கறுப்பு நிறத்தில் மலங்கழித்தால் உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசரநிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்.
நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?
உங்கள் பிள்ளைக்குக் கொப்புளிப்பான் நோய் வந்தால் அல்லது கொப்புளிப்பான் நோயுள்ள எவருடனாவது தொடர்பு வைத்திருந்தால் உங்கள் மருத்துவரை அழைக்கவும்.
உங்கள் பிள்ளை ஏதாவது அறுவைச் சிகிச்சைக்கு உட்படுவதற்கு முன்பு, பல் அறுவைச் சிகிச்சையாக இருந்தாலும் கூட, அல்லது அவசரநிலை சிகிச்சைக்கு முன்னர், உங்கள் பிள்ளை கோர்டிகொஸ்டெயிரொயிட்ஸ் மருந்தை உட்கொள்வதாக, உங்கள் மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
உங்கள் பிள்ளைக்கு கோர்டிகொஸ்டெயிரொயிட்ஸ் மருந்துக்கு அல்லது வேறு ஏதாவது மருந்துகளுக்கு ஏதாவது அசாதாரண அல்லது ஒவ்வாமை எதிர்விளைவு இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளருக்குத் தெரிவிக்கவும்.
உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள், மருத்துவரின் கட்டளை (மருந்துக் குறிப்பு) இல்லாது வாங்கக்கூடிய மருந்துகளாக இருந்தாலும் கூட, அவற்றைக் கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.
காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.
கோர்டிகொஸ்டெயிரொயிட்ஸ் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை அளவுக்கதிகமாக உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:
- நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
- நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
- நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.
பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது கோர்டிகொஸ்டெயிரொயிட்ஸ் மருந்துகளைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. கோர்டிகொஸ்டெயிரொயிட்ஸ் மருந்துகளைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.