அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரும் மயக்கமருந்து(அநெஸ்டீஷியா) கொடுத்த பின்னரும்: வீட்டில் உங்களுடைய பிள்ளையைப் பராமரித்தல்

Post-operative and post-anesthetic care: Caring for your child at home [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

ஒரு பொது மயக்கமருந்து என்பது, ஒரு அறுவைச் சிகிச்சையின் போது அல்லது ஒரு செயல்முறையின் போது உங்களுடைய பிள்ளையை உறங்க வைக்கும் ஒரு விசேஷ மருந்து ஆகும். செயல்முறையின் பிள்ளர், உங்களுடைய பிள்ளையை வீட்டில் எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்ளவும்

பொது மயக்கமருந்து(ஜெனரல் அநெஸ்டீஷியா) கொடுத்த பின்னர் உங்களுடைய பிள்ளையை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றி இந்தத் தகவல் உங்களுக்கு விளக்கும். பொது மயக்க மருந்து என்பது, ஒரு அறுவைச் சிகிச்சை அல்லது ஒரு செயல்முறையின் போது, உங்களுடைய பிள்ளையை உறங்கவைக்கும் ஒரு விசேஷ மருந்து.

(Clinic information sticker to be placed here)

உங்களுடைய பிள்ளையின் சிகிச்சையைப் பற்றிய முக்கியமான தகவல்கள்

உங்களுடைய பிள்ளையின் தாதி அல்லது மருத்துவர் பின்வரும் தகவல்களைப் பூர்த்தி செய்வார்:

உங்களுடைய பிள்ளையின் பெயர் / Your child's name : ____________________________________________________________

திகதி / Date : _________________________________________________

செயல்முறை / Procedure : _______________________________________

மருத்துவர் / Doctor : ____________________________________________

மோர்ஃபின் கொடுக்கப்பட்ட நேரம் / Morphine given at : _____________________________________________________________

அசெட்டோமினோஃபின் (டைலனோல்) கொடுக்கப்பட்ட நேரம் / Acetaminophen (Tylenol) given at : _____________________________________________________

கிரவோல் கொடுக்கப்பட்ட நேரம் / Gravol given at : _____________________________________________________________

வேறு / Other : _________________________________________________

_____________________________________________________________

_____________________________________________________________

கோடல் /எபிடூரல் / Caudal/Epidural :           ஆம் (y)          இல்லை (n)

க்கான மருந்துக்குறிப்புகள் / Prescription for : _____________________________________________________________

அடுத்த தொடர் சந்திப்புத் திட்டம் / Next follow-up appointment will be with : _______________________________________________ உடன் இருக்கும்.



உங்களுடைய பிள்ளையை மருத்துவமனைக்குத் திரும்பவும் கொண்டுவரவேண்டியிருந்தால் அல்லது ஒரு மருந்துவரைச் சந்திக்கவேண்டியிருந்தால், இந்தத் தாளை உங்களுடன் எடுத்துச் செல்லவும். இந்தத் தகவற்தாள், உங்களுடைய பிள்ளையின் அறுவைச்சிகிச்சையையும் மற்றச் சிகிச்சைகளையும் பற்றி மருத்துவருக்குத் தெரிவிக்கும்.

அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய நடவடிக்கைகள்

மயக்க மருந்து அல்லது அமைதிப்படுத்தும் மருந்து(செடேஷன்) கொடுக்கப்பட்ட பின்னர் 6 மணி நேரங்களுக்கு உங்களுடைய பிள்ளை மயக்கமாயும் தடுமாறும் நிலையிலும் இருப்பான். உங்களுடைய பிள்ளை, இன்றைக்கு வீடியோ அல்லது தொலைக்காட்சி பார்த்தல், அல்லது இசை கேட்டல் போன்ற அமைதியான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.

நல்ல சமநிலை தேவைப்படும் நடவடிக்கைகளில் ஈடுபட உங்களுடைய பிள்ளையை அனுமதிக்கவேண்டாம். உதாரணமாக, உங்களுடைய பிள்ளையை ஹொக்கி அல்லது ஸொக்கர் போன்ற விளையாட்டுக்கள், ரோலர் பிளேட், சைக்கிள் ஓட்டுதல், அல்லது நீச்சல் போன்றவற்றில் ஈடுபட அனுமதிக்கவேண்டாம்.

உங்களுடைய பிள்ளையின் இன்றைய நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யவும்.

உங்களுடைய மருத்துவர் வித்தியாசமாக ஏதாவது உங்களுக்குக் கூறாதிருந்தால், உங்களுடைய பிள்ளை நாளைக்கு தன்னுடைய வழக்கமான நடவடிக்கைகளுக்குத் திரும்பலாம்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உணவு உண்ணுதலும் பானங்கள் குடித்தலும்

இன்றைக்கு உங்களுடைய பிள்ளைக்கு அதிகளவு நீராகாரம் தேவைப்படும். தண்ணீர், பிரொத், பொப்சிக்கிள்ஸ், நுரையைக் கொண்டிராத ஜிஞ்சர் ஏல் அல்லது ஜெல்- ஓ (ஜெலி வடிவிலுள்ள ஒரு தெளிவான பானம்) போன்ற தெளிவான நீராகாரங்களை உங்களுடைய பிள்ளைக்குக் கொடுக்கவும்.

இந்த நீராகாரங்கள் அல்லது ஜெல்- ஓ ஐக் கொடுத்த பின்னர், உங்களுடைய பிள்ளைக்கு வயிற்றில் அசௌகரியம் அல்லது வாந்தி ஏற்படாவிட்டால், அவன்(ள்) ஒரு சிறிய உணவை உண்ணத் தொடங்கலாம். ஒரு சிறிய உணவு என்பது, சூப்புடன் டோஸ்ட் அல்லது கிறக்கர்ஸ் ஆக இருக்கலாம்.

பர்கர்கள் அல்லது ஃபிறைஸ் போன்ற பொரித்த உணவுகள், அல்லது சீஸ், யோகேட், ஐஸ் கிறீம் போன்ற பாலில் செய்யப்பட்ட உணவுகளுடன் தொடங்க வேண்டாம். மயக்க மருந்து அல்லது அமைதிப்படுத்தும் மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் இந்த உணவுகளை உட்கொண்டால் அவை, உங்களுடைய பிள்ளையின் வயிற்றில் அசௌகரியம் அல்லது வாந்தியை ஏற்படுத்தும்.

உங்களுடைய பிள்ளையின் வயிற்று அசௌகரியத்துக்குத் தெளிவான நீராகாரங்களைக் கொடுக்கவும்.

உங்களுடைய பிள்ளைக்கு வயிற்றில் அசௌகரியம் அல்லது வாந்தி ஏற்பட்டால் அவனுக்கு அடிக்கடி சிறிய அளவில் தெளிவான நீராகாரம் கொடுக்கவும்.

கிறக்கர்கள் அல்லது டோஸ்ட் போன்ற ஒரு சிறிய அளவு உணவையும் உங்களுடைய பிள்ளைக்குக் கொடுக்க நீங்கள் முயற்சி செய்யலாம். சில சமயங்களில் அசௌகரியமடைந்த வயிற்றை நிவாரணமடையச் செய்வதற்கு இந்த உணவுகள் உதவி செய்யலாம்.

உங்களுடைய பிள்ளைக்கு 6 மணி நேரத்துக்கு மேலாக வயிற்றில் அசௌகரியம் அல்லது வாந்தி தொடர்ந்திருந்தால் உங்களுடைய மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்களுடைய பகுதியிலுள்ள அவசர சிகிச்சை நிலைப் பிரிவுக்குச் செல்லவும்.

உங்களுடைய பிள்ளையின் வலிக்கு என்ன செய்யவேண்டும்

உங்களுடைய பிள்ளையின் வலிக்கு சிகிச்சை செய்வது அவன் விரைவாக நிவாரணமடைவதற்கு உதவி செய்யும்.

உங்களுடைய பிள்ளைக்கு வலி இருந்தால், மருத்துவர் வலிக்காக கொடுக்கும்படி உத்தரவிட்ட மருந்தைக் கொடுக்கவும். அல்லது உங்களுடைய குடும்ப மருத்துவர் வலிக்கு அல்லது காய்ச்சலுக்கு உட்கொள்ளும்படி கூறிய மருந்தை உங்களுடைய பிள்ளைக்குக் கொடுக்கவும்.

முதுகின் அடிப்பகுதியில் மயக்கமருந்து கொடுத்தல்

உங்களுடைய பிள்ளையின் முதுகின் அடிப்பகுதியில், எபிடூரல் அல்லது கோடல் பிளொக் என அழைக்கப்படும் மயக்க மருந்து கொடுக்கப்படலாம்.

உங்களுடைய பிள்ளைக்கு எபிடூரல் அல்லது கோடல் பிளொக் கொடுக்கப்பட்டிருந்தால் அவனுக்கு காலில் பலவீனம் ஏற்படலாம். இந்தப் பலவீனம் ஒரு சில மணி நேரங்களில் நிவாரணமடைந்து விடவேண்டும். உங்களுடைய பிள்ளையின் காலில் பலம் வரும்வரை நீங்கள் அவனைக் கவனமாக அவதானிக்கவேண்டும்.

உங்களுடைய பிள்ளைக்குக் காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம்

அநேக பிள்ளைகளுக்கு, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் இலேசான காய்ச்சல் ஏற்படலாம். காய்ச்சல் ஒரு சில நாட்களுக்குள் நிவாரணமடைந்துவிடும். உங்களுடைய பிள்ளைக்குக் காய்ச்சல் இருந்தால், அவனுக்கு அதிகளவு நீராகாரங்களும் உங்களுடைய மருத்துவர் சிபாரிசு செய்த மருந்துகளையும் கொடுக்கவும். உங்களுடைய பிள்ளைக்கு காய்ச்சல் அதிகளவில் இருந்தால்அல்லது நீங்கள் கவலையடைந்தால், உங்களுடைய மருத்துவரை அழைக்கவும்.

உங்களுக்கு ஏதாவது கவலைகள் இருந்தால் எவரை அழைக்கவேண்டும்

உங்களுடைய பிள்ளையின் உடல்நலம் குறிந்து உங்களுக்கு ஏதாவது கவலைகள் இருந்தால், உடனே உங்களுடைய மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும். உங்களுடைய அடுத்த சந்திப்புத் திட்டக் காலம் வரை காத்திருக்கவேண்டாம்.

முக்கிய குறிப்புகள்

  • உங்களுடைய பிள்ளைக்கு மயக்க மருந்து அல்லது அமைதிப்படுத்தும் மருந்து கொடுக்கப்பட்ட பின்னர், அவன் அமைதியான நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவேண்டும்.
  • உங்களுடைய பிள்ளைக்கு அதிகளவு நீராகாரம் தேவைப்படும். உங்களுடைய பிள்ளைக்கு வாந்தி அல்லது வயிற்றில் அசௌகரியம் ஏற்படாது நீராகாரங்களை அருந்த முடிந்தால், ஒரு சிறிய உணவை உண்ண முயற்சிக்கலாம்.
  • 6 மணி நேரங்களுக்கு மேலாக, உங்களுடைய பிள்ளைக்கு வயிற்றில் அசௌகரியம் அல்லது வாந்தி தொடர்ந்து இருந்தால், உங்களுடைய மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்களுக்கு மிக அருகில் இருக்கும் அவசரச் சிகிச்சை நிலைப் பிரிவுக்கு உங்களுடைய பிள்ளையை அழைத்துச் செல்லவும்.
  • உங்களுடைய பிள்ளைக்கு வலி அல்லது காய்ச்சல் இருந்தால், அவனுக்கு மருத்துவர் கொடுக்கும்படி உத்தரவிட்ட மருந்தைக் கொடுக்கவும்.
  • உங்களுடைய பிள்ளையின் உடல்நலனைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், காத்திருக்கவேண்டாம். உங்களுடைய மருத்துவரை உடனே தொடர்பு கொள்ளவும். இந்தத் தகவற்தாளை உங்களுடன் எடுத்துச் செல்லவும்.
Last updated: November 05 2010