இதயதினுள் வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை; செயல்பாட்டின்பின் உங்கள் பிள்ளையைப் பராமரித்தல்

Heart catheterization: Caring for your child after the procedure [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

மெல்லிய குழாய்களை உபயோகித்து தற்போதுதான் இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட உங்கள் பிள்ளையை எப்படிப் பராமரிக்க வேண்டும் எனக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் பிள்ளைக்கு இதயம், அல்லது இதயத்துக்குரிய, வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. உங்கள் பிள்ளை, அந்தச் செயல்பாட்டிலிருந்து நிவாரணமடைய சில அறிவுரைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் பிள்ளையின் இதயத்திற்குள் வடிகுழாய் செலுத்தப்பட்ட பகுதியை 5 நாட்களுக்குப் பராமரிக்க வேண்டும்.

உங்கள் பிள்ளையின் நாடி அல்லது நாள நரம்பினுள், இதய நோய் மருத்துவர் கதீற்றரை செலுத்திய இடம் தான், வடிகுழாய் உட் செலுத்தப்பட்ட பிரதேசமாகும். பெரும்பாலும் இது உங்கள் பிள்ளையின் காலின் மேற்பகுதியிலுள்ள பிரதேசமாயிருக்கும். இது கவடு என்றும் அழைக்கப்படும். சில சமயங்களில் இதன் பிரதேசம் கழுத்தாகவும் இருக்கும்.

இந்தப் பிரதேசம் சுத்தம் மற்றும் உலர்ந்ததாக இருக்கவேண்டும். இது நிவாரணமடைய உதவி செய்யும். வடிகுழாய் உட்செலுத்தப்பட்டபின் 5 நாட்களுக்கு பன்டேஜினால் மூடப்பட்டிருக்க வேண்டும். அந்த 5 நாட்களும், பன்டேஜை ஒரு நாளுக்கொரு முறை மாற்றவேண்டும். பன்டேஜ் அழுக்காகும்போதெல்லாம் கூட அதை மாற்ற வேண்டும். இப்போதும் டயபர் உபயோகித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, மேலும் அடிக்கடி மாற்ற வேண்டும்.

நீங்கள் ஒவ்வொரு முறை பன்டேஜ் மாற்றும்போதும், அந்தப் பிரதேசத்தைப் பார்த்து,நிவாரணமடைந்து கொண்டு வருகிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். முதல் நாளில், பெரும்பாலும் பழைய பன்டேஜில் இரத்தக்கறை காணப்படலாம். அந்தப் பிரதேசம் சிவந்ததாக அல்லது வீக்கமுள்ளதாகக் காணப்படக்கூடாது.

உங்கள் பிள்ளை உட்கொள்ள வேண்டிய மருந்துகள்

உங்கள் பிள்ளை திரும்பவும் தன் வழக்கமான மருந்துகளை எப்போது உட்கொள்ள வேண்டும் மற்றும் அதில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தாதி உங்களுக்கு விளக்கமாகச் சொல்லுவார். உங்கள் பிள்ளை உட்கொள்ளவேண்டிய மருந்துகள் பற்றிய தகவல்கள் உங்களுக்குக் கொடுக்கப்படாவிட்டால், தயவு செய்து உங்கள் பிள்ளையின் தாதியிடம் கேட்கவும்.

ஏதாவது மாற்றங்கள் இருந்தால் இங்கே எழுதவும்:

 

 

மருத்துவரை எப்போது அழைக்கவேண்டும்

சில பிள்ளைகளுக்கு வடிகுழாய் உட் செலுத்தப்பட்ட பிரதேசத்தைச் சுற்றி நசுக்குக் காயங்கள் காணப்படும். சிறிய நசுக்குக் காயங்கள் சிறிது காலத்தில் குணமாகி வந்தால் அவை சாதாரணமானவை. நசுக்குக் காயங்களின் நிறம் மங்கிக்கொண்டே வந்தால் அவை நிவாரணமடைந்துகொண்டு வருகின்றன என்று நீங்கள் சொல்லலாம். உங்கள் பிள்ளைக்கு எதாவது வீக்கம் அல்லது சிவத்தல், அல்லது காய்ச்சல் இருந்தால், உங்கள் பிள்ளையின் குழந்தை மருத்துவ வல்லுனர் அல்லது குடும்ப மருத்துவரை அழைக்கவும்.

வடிகுழாய் உட் செலுத்தப்பட்ட பிரதேசத்தின் பக்கத்தில் கவட்டில் அல்லது காலில் புண்வலி இருப்பதாக உங்கள் பிள்ளை முறையிடலாம். 1 அல்லது 2 நாட்களுக்குப் புண்வலி இருப்பது சாதாரணம். ஆனால் இரண்டு நாட்களுக்கு மேலாகப் புண்வலி இருந்தால் உங்கள் பிள்ளையின் குழந்தை மருத்துவ வல்லுனர் அல்லது குடும்ப மருத்துவரை அழைக்கவும்.

அவசரநிலைப் பிரிவுக்கு எப்போது போகவேண்டும்

வடிகுழாய் உட் செலுத்தப்பட்ட பிரதேசத்தில் இரத்தம் வரத் தொடங்கினால், குறைந்தது 5 நிமிடங்களுக்காவது , ஒரு சுத்தமான சல்லடைத்துணியால் நன்றாக அழுத்தவும்.

5 நிமிடங்களில் இரத்தம் வடித்தல் நிறுத்தப்படாவிட்டால்:

  • அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கவும் மற்றும்
  • மிக அருகாமையிலிருக்கும் அவசரநிலைப் பிரிவுக்குச் செல்லவும்.

உங்கள் பிள்ளையின் காலில் வீக்கம், நிறம் வெளிறிப் போதல், அல்லது தொடும்போது குளிர்மையாயிருத்தல்

  • கடமையில் இருக்கும்இதயநோய் மருத்துவரை அழைக்கவும் மற்றும்
  • மிக அருகாமையிலிருக்கும் அவசரநிலைப் பிரிவுக்குச் செல்லவும்.

உங்கள் இதய சிகிச்சை மருத்துவ நிலையத்தின் அழைப்பு எண்ணைக் கீழே எழுதவும்:

 

பஞ்சொற்றுக் குளியல் அல்லது ஷவர்க் குளியல் மாத்திரம்

வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை செய்து முடித்த 5 நாட்களுக்கு உங்கள் பிள்ளை, தொட்டிக் குளியல் அல்லது நீச்சலைடிப்பதைத் தவிர்க்க வேண்டும். வடிகுழாய் உட் செலுத்தப்பட்ட பிரதேசம் தண்ணீரில் ஊறுமானால், அதில் தொற்று நோய் உண்டாக அதிகளவு சாத்தியம் உண்டு. எனவே, அதற்குப் பதிலாக, உங்கள் பிள்ளைக்கு பஞ்சொற்றுக் குளியல் அல்லது ஷவர்க் குளியல் கொடுக்கலாம்.

உங்கள் பிள்ளை சாதாரணமாக சாப்பிடலாம்

உங்கள் பிள்ளை மருத்துவமனையை விட்டு வீட்டுக்குச் சென்றவுடன், அவன் வழக்கம் போல சாப்பிடலாம். பரிசோதனையைத் தொடர்ந்து, முதல் நாள்(24) மணி நேரங்களுக்கு உங்கள் பிள்ளைக்கு வயிற்றுக் குழப்பம் இருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு பொது மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தால் பொரும்பாலும் இது அதிகமாக சம்பவிக்கும். உங்கள் பிள்ளையின் வயிற்றுக்குழப்பம் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், உங்கள் பிள்ளையின் குழந்தை மருத்துவ வல்லுனர் அல்லது குடும்ப மருத்துவரை அழைக்கவும்.

சிகிச்சை முடிந்தபின்னர் முதல் 5 நாட்களுக்கு உங்கள் பிள்ளை அதிகளவு சுறுசுறுப்பான செயல்பாடுள்ளவனாக இருக்கக்கூடாது

உங்கள் பிள்ளை மருத்துவமனையை விட்டு வீட்டுக்குச் சென்றபின் அமைதியான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். சுமார் 5 நாட்களுக்கு, உங்கள் பிள்ளை அதிகளவு சுறுசுறுப்பாய் இருக்கக் கூடாது. உதாரணமாக நீண்ட தூர நடைகள், சைக்கிள் ஓடுதல், தொட்டு மோதி விளையாடுதல் ஆகியவை இரத்தக்கசிவைத் தோற்றுவிக்கக்கூடும் என்பதால் இவை தவிர்க்கப்படவேண்டும்.

உங்கள் பிள்ளையின் இருதய நோய் மருத்துவர், உங்கள் பிள்ளை குறிப்பிட்ட சில நடவடிக்ககளில் ஈடுபடக்கூடாது என்று சொல்லக்கூடும். உங்கள் பிள்ளை என்ன செய்யவேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பது பற்றி ஏதாவது கேள்வி இருந்தால், தயவு செய்து இருதய நோய் மருத்துவமனையை அழைக்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • பெரும்பாலும் பிள்ளகளுக்கு, இதயதினுள் வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை செய்யப்பட்டபின் நிவாரணமடைய கொஞ்சக் காலம் தேவைப்படும்.
  • செயல்பாட்டின் பின்னர், முதல் 5 நாட்களுக்கு , உங்கள் பிள்ளையின் பன்டேஜை ஒரு நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
  • சிகிச்சை செய்யப்பட்ட பகுதியிலிருந்து,5 நிமிடங்களுக்குமேல் இரத்தம் வடிதல் தொடர்ந்திருந்தால், அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கவும் மற்றும் மிக அருகாமையிலிருக்கும் அவசரநிலைப் பிரிவுக்குச் செல்லவும்.
  • சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில், எதாவது வீக்கம் அல்லது சிவத்தலை நீங்கள் அவதானித்தால், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேலாக அந்தப் பகுதியில் புண்வலி இருந்தால், அல்லது உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் அல்லது வயிற்றுக் குழப்பம் இருந்தால், உங்கள் பிள்ளையின் குடும்ப மருத்துவர் அல்லது குழந்தை மருத்துவ வல்லுனரை அழைக்கவும்.
  • உங்கள் பிள்ளையின் காலில் வீக்கம், நிறம் வெளிறிப் போதல், அல்லது தொடும்போது குளிர்மையாயிருத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால்,கடமையில் இருக்கும் இதயநோய்மருத்துவரை அழைக்கவும் மற்றும் மிக அருகாமையிலிருக்கும் அவசரநிலைப் பிரிவுக்குச் செல்லவும் .
Last updated: November 17 2009